கணபதி ஸ்தபதியாரின் 'சிற்பச் செந்நூல்' சிற்பக் கலையின் அடிப்படை இலக்கணங்களை விளக்கும் இக்காலத்தின் முதன்மை நூலாகத் திகழ்கிறது. அதன் அடிப்படையில் 'ஹஸ்தங்கள்' என்னும் கை அமைதிகளைபடங்களுடன் விளக்கும் முயற்சி இது.
கை விரல்களை 'நீட்டுதல், மடக்குதல், கூட்டுதல், விலக்குதல், குவித்தல்' ஆகிய ஐந்து நிலைகளின் அடிப்படையில், கை அமைதிகளை ஒரு பொருளை அல்லது கருத்தைச் சுட்டும் குறியீடுகளாக ஆடற் கலையில் வரையறுத்துள்ளனர். ஆடற் கலையின் இந்தக் கை அமைதிகள் 'முத்திரைகள் அல்லது பிடிகள்' எனப்படும். சிற்பக்கலையில் இந்தக் கை அமைதிகள் சில மாற்றங்களோடும், பெயர் வேறுபாடுகளோடும் வழங்கி வருகின்றன. சிற்பக் கலையில் கை அமைதி 'ஹஸ்தம்' எனப்படுகிறது.
வகைப்பாடு
கை விரல்களை 'நீட்டுதல், மடக்குதல், கூட்டுதல், விலக்குதல், குவித்தல்' ஆகிய ஐந்து நிலைகளின் அடிப்படையில், கை அமைதிகளை ஒரு பொருளை அல்லது கருத்தைச் சுட்டும் குறியீடுகளாக ஆடற் கலையில் வரையறுத்துள்ளனர். ஆடற் கலையின் இந்தக் கை அமைதிகள் 'முத்திரைகள் அல்லது பிடிகள்' எனப்படும். சிற்பக்கலையில் இந்தக் கை அமைதிகள் சில மாற்றங்களோடும், பெயர் வேறுபாடுகளோடும் வழங்கி வருகின்றன. சிற்பக் கலையில் கை அமைதி 'ஹஸ்தம்' எனப்படுகிறது.
வகைப்பாடு
![]() |
| கை அமைதிகளின் வகைப்பாடு |
கை அமைதிகள் இரு வகைப்படும்
- தொழிற் கைகள் - ஆயுதங்கள் முதலிய கருவிகளை ஏந்தியோ அல்லது கருவிகள் ஏதும் இன்றி ஒரு கருத்தை சுட்டியோ அமையும் கைகள்.
- எழிற் கைகள் - எந்த கருவியும் இல்லாமல், எந்த கருத்தையும் குறிக்காமல் சிற்பத்தின் சமநிலைக்காகவும் எழிலுக்காகவும் அமையும் கைகள்.
தொழிற் கைகள் இருவகைப்படும்.
- ஒற்றைக் கைகள் - ஒரு கை தனித்து பொருள் கொள்வது.
- இரட்டைக் கைகள் - இரண்டு கைகள் இணைந்து பொருள் குறிப்பன.
நால்வகை எழிற்கைகளும் ஒற்றைக் கைகள்தான்.
புரிதலுக்காக ஒற்றைத் தொழிற் கைகளை இருவகையாகப் பிரிக்கலாம்.
- கருத்துக் கை- ஆயுதங்கள் முதலிய கருவிகள் ஏதும் இன்றி ஒரு கருத்தை சுட்டி அமையும் ஒற்றைக் கை.
- கருவிக் கை - ஆயுதங்கள் முதலிய கருவிகளை ஏந்தி அமையும் கை. 'ஆயுதம்' என்ற சொல்லுக்கு தமிழில் 'கருவி' மற்றும் 'போர்க்கருவி' என இரு பொருட்கள் உண்டு.
எடுத்துக்காட்டுகள்:
![]() |
| கடக ஹஸ்தம் கருவி ஒற்றைத் தொழிற்கை |
![]() |
| அஞ்சலி ஹஸ்தம் இரட்டைத் தொழிற்கை |
![]() |
| டோல ஹஸ்தம் எழிற் கை |
ஹஸ்தங்களின் பட்டியல்
- ஒற்றைத் தொழிற்கை - 24
- கருத்துக் கைகள் (17)
- கருவிக் கைகள் (7)
- இரட்டைத் தொழிற் கைகள் - 4
- எழிற்கைகள் - 4
- மொத்தம் - 32
பல கைஅமைதிகள் மற்றொரு கை அமைதியை வடிவத்திலோ, கருத்திலோ. பயன்பாட்டிலோ ஒத்துள்ளன. கீழ்கண்ட பட்டியலில் தொடர்புடைய கை அமைதியைக் கொண்ட ஹஸ்தங்கள் ஒன்றாகப் பட்டியலிடப்பட்டுள்ளன.
ஒற்றை தொழிற் கைகள்
கருத்துக் கைகள்
கருவிக் கைகள்
இரட்டைத் தொழிற் கைகள்
எழிற்கைகள்
நன்றிக்கடன்
- கணபதி ஸ்தபதி; சிற்பச் செந்நூல்; தொழில் நுட்பக் கல்விக் கழகம்; மூன்றாம் வெளியீடு; 2001
- Gopinatha Rao, T. A.; Elements of hindu iconography; Motilal Banarasidas Publishers Pvt Ltd; 1914 Reprint 1997.
- South Indian images of Gods and Godesses; Krishna Sastri. H; Madras Governement Press; 1916
- கோ. திருஞானம்; உருவக்கோடுகள்; 1998
- How to See a Museum - Participant Handbook; Tamil Heritage Trust
- https://www.wisdomlib.org
- temple.dinamalar.com
- மா மாரிராஜன்; சிற்ப இலக்கணத் தொடர்; மெய் எழுத்து


















Comments
Post a Comment