அபய ஹஸ்தம், வரத அஸ்தம், தாடன ஹஸ்தம், நித்ரா ஹஸ்தம் ஆகிய நான்கு ஹஸ்த வகைகளும் ஓரே கை அமைதியை அடிப்படையாகக் கொண்டவை. அந்த கை அமைதி பிடிக்கப்படும் விதத்தில்தான் வேறுபடுகின்றன. அபய ஹஸ்தம் (காக்கும் கை) - வரத ஹஸ்தம் (வழங்கும் கை) அமைதி இந்த இருவகை கை அமைதிகள் ஐந்து விரல்களையும் நீட்டி, ஒன்றோடொன்று ஒட்டி அமைத்து, உள்ளங்கை வெளிநோக்கி இருக்குமாறு அமையும். அபய ஹஸ்தத்தில் விரல்கள் மேல்நோக்கி இருக்கும். நடுவிரலின் நுனி பொதுவாக முலைக்காம்பின் மட்டத்தில் அமையும். அபய ஹஸ்தத்தில் உள்ள கையை கீழ் நோக்கி திருப்பினால் கிடைக்கும் அமைதி வரத ஹஸ்தம். விரல்கள் கீழ்நோக்கி இருக்கும். நடுவிரலின் நுனி ஆசன வாய் மட்டத்தில் அமையும். அபய ஹஸ்தம் (வலதுகை) வரத ஹஸ்தம் (இடது கை) குறிப்பு இவை கருத்து ஒற்றைக் கை அமைதிகள். அபயம் = அ+ பயம் = அச்சமின்மை. அபய ஹஸ்தம் என்னும் காக்கும் கை தன்னில் தஞ்சமடைந்தோர்க்கு 'அஞ்சற்க. யாமிருக்க பயமேன்' என்ற குறிப்பை உணர்த்துகிறது. அபய ஹஸ்த கை அமைதி நாட்டியத்தில் 'பதாகம்' (கொடி) என்று அழைக்கப்படுகிறது. வரதம் = வரமளிப்பது. 'அடியவர்கள் கேட்டதை வழங்குவேன்' என்னும் குற...