Skip to main content

Posts

Showing posts from May, 2023

பங்க இலக்கணம்

இந்திய சிற்பக் கலை மரபில் சிற்ப வடிவம் இயற்கையாக அமைக்கப்படுவதில்லை. அவை ஆடற்கலை பாணியில் உணர்ச்சிகளை, கருத்துகளை மொழியின்றி வெளிப்படுத்தும் வகையில் வரையறுக்கப்பட்டுள்ள இலக்கணங்களுக்கு ஏற்ப அமைகின்றன. இது இந்திய சிற்பக் கலை மரபின் சிறப்பியல்பு. இவ்விதத்தில் இந்திய சிற்பக்கலை மரபு மற்ற நாடுகளின் சிற்பக்கலை மரபுகளில் இருந்து வேறுபடுகிறது. ஆடற்கலை இலக்கணங்களை நேரடியாகக் கொள்ளமல் படிமத்தின் தன்மை, கருத்துக்கேற்ப சிற்பக்கலை தன் இலக்கணங்களை வகுத்துக்கொண்டுள்ளது. அவற்றுள் ஆசனங்கள், உடல் பங்கங்கள், கை முத்திரைகள் முக்கியமானவை. பங்கம் படிமங்களின் உடல் ஒடிவு, வளைவுகளுக்கு பங்கம் என்று பெயர். பங்க அமைதி நின்ற நிலை படிமங்களுக்கே உரித்தானது. கல்லில் வடிப்பதைவிட உலோகங்களில் பங்கங்களை எளிதாகக் காட்ட முடியும்.  வகைப்பாடு பங்கம் மூவகைப்படும் ஆபங்கம் - குறைந்த ஒடிவு, வளைவு சமபங்கம் - இடைப்பட்ட ஒடிவு, வளைவு அதிபங்கம் - அதிகமான ஒடிவு, வளைவு மூன்று பங்க அமைதிகளுமே மூன்று உடல் ஒடிவுகள் கொண்டிருப்பதால் அவை ' திரிபங்கம்'  என்றும் அழைக்கப்படும். பங்க அமைதிகளின் கருத்து நிலை சமபாத ஸ்தானகம் தலையும் உடல...

திருக்கோலங்கள் (ஆசனங்கள்)

ஆடற்கலை, யோகம், மக்களின் வாழ்வில் காணப்படும் இயல்பான அமைதிகள் இவற்றில் உள்ள கூறுகளைத் தொகுத்து தன் தேவைக்கேற்ப இலக்கணம் வகுத்து வகைமைப் படுத்திக் கொண்டது சிற்பக்கலை. தெரிந்ததன் மூலம் தெரியாததை விளக்கும் முயற்சி. கணபதி ஸ்தபதியாரின் 'சிற்பச் செந்நூல்' சிற்பக் கலையின் அடிப்படை இலக்கணங்களை விளக்கும் இக்காலத்தின் முதன்மை நூலாகத் திகழ்கிறது. அதன் அடிப்படையில் திருக்கோலம் என்னும் ஆசனங்களை படங்களுடன் விளக்கும் முயற்சி இது. அவர் குறிப்பிட்டிற்கும் வகைமைகளுக்குள் துணை வகைமைகளை உருவாக்கி திருக்கோலங்கள் வரிசைப் படுத்தப்படுள்ளன. திருக்கோலம் என்பது படிமங்களின் உடல் அமைதியைக் குறிக்கும். குறிப்பாக கால் அமைதிகளைக் குறிக்கும், 'ஹஸ்தம்' கை அமைதியைக் குறிப்பது போல.  வடமொழியில் திருக்கோலம் ' ஆசனம்' எனப்படும்.  'ஆசனம்' என்னும் சொல் பொதுவாக அமர்ந்த கோலத்தைக் குறிக்கும். அதே சமயம் சிற்பக்கலைச் சொல்லாக 'கோலம்' (தோன்றும் நிலை) என்றும் பொருள் தரும். 'ஆசனம்' இருக்கை, பீடம் என்றும் பொருள் தரும். எனவே 'ஆசனம்' என்ற சொல்லுக்கு சிற்பக் கலையில் மூன்று பொருள்கள் உ...