எழிற்கைகள்
எழிற்கைகள் கருவி ஏந்தாமல், பொதுவான கருத்து ஏதும் இல்லாமல் படிமத்தின் எழிலுக்காக அமையும் கை அமைதிகள். கஜ ஹஸ்தம், தண்ட ஹஸ்தம், டோல ஹஸ்தம், பிரசாரித ஹஸ்தம் ஆகிய நான்கு எழிற்கைகளும் மணிக்கட்டிலிருந்து பல்லவ ஹஸ்தத்தின் கை அமைதியை கொண்டவையே. மேலும் நான்கும் முழங்கை வளையாமல் கையை நேராக வைத்தவை. அவ்வாறு நீண்ட கைகள் தோளில் இருந்து எந்தப் பக்கம் நீண்டுள்ளன என்பதில்தான் வேறுபாடு. தவிர அவை அமையும் படிம வகைகளும் வேறு.
- கஜ ஹஸ்தம் - உடலின் குறுக்கே எதிர் பக்கம் நீண்டது- நாட்டிய நிலை படிமங்களுக்கு உரியது.
- தண்ட ஹஸ்தம் - முன்னோக்கி நீண்டது - அமர்ந்த நிலை படிமங்களுக்கு உரியது.
- டோல ஹஸ்தம் - உடலின் பக்கத்தில் தொங்கி நின்றது - நின்ற நிலை பெண் படிமங்களுக்கு உரியது.
- பிரசாரித ஹஸ்தம் - பக்கவாட்டில் வெளிப் பக்கமாக நீண்டது- நாட்டிய நிலை படிமங்களுக்கு உரியது.
![]() |
| கஜ ஹஸ்தம் - தண்ட ஹஸ்தம் - டோல ஹஸ்தம் - பிரசாரித ஹஸ்தம் |
கஜ ஹஸ்தம்
அமைதி
- முழங்கையை மடிக்காமல், நேராக வைத்த கை உடலின் குறுக்கே எதிர்பக்கம் நோக்கி நீண்டு அமையும்.
- மணிக்கட்டிலிருந்து பல்லவ ஹஸ்தமாய் கீழ் நோக்கித் தொங்கும்.
![]() |
| கஜ ஹஸ்தம் |
குறிப்பு
- கஜ ஹஸ்தம் ஒரு எழிற் கை.
- கஜம் = யானை. யானையின் தும்பிக்கை போல் உள்ளதால் இப்பெயர்.
மாற்றுப் பெயர்
கஜ ஹஸ்தம் 'கரி ஹஸ்தம்' என்றும் அழைக்கப்படும். கரி = யானை.
படிமங்கள்
- ஆடலரசன்
- சிவனின் பல தாண்டவ, நடன கோலங்கள்
![]() |
| கஜ ஹஸ்தம் (கரி ஹஸ்தம்) ஆடலரசன் (Art Institute of Chicago, CC0, via Wikimedia Commons) |
![]() |
| கஜ ஹஸ்தம் சதுர தாண்டவம் பாதாமி குகைக்கோயில் ஒன்று |
தண்ட ஹஸ்தம்
அமைதி
- முழங்கையை மடிக்காமல், நேராக வைத்த கை, முன்னோக்கி நீட்டி இருக்கும்.
- உத்குடிகாசனம், மகராஜ லீலாசனம், யோகாசனம், அர்த்த யோகாசனம் முதலிய அமர்ந்த நிலை படிமங்களில் மடக்கி நிறுத்திய முழங்காலின் மீது மணிக்கட்டை வைத்த நிலையில் இருக்கும்.
- மணிக்கட்டிலிருந்து பல்லவ ஹஸ்தமாய் கீழ் நோக்கித் தொங்கும்.
குறிப்பு
- தண்ட ஹஸ்தம் ஒரு எழிற் கை.
- தண்டம் = தடி. கை தடி போல் நீண்டு உள்ளதால் இப்பெயர்.
படிமங்கள்
- ஐயனார்
- வைகுண்டவாசப் பெருமாள்
- யோக, தியான கோல படிமங்கள்
![]() |
| தண்ட ஹஸ்தம் - இடது கை ஐயனார், சென்னை அருங்காட்சியகம், (கிடைத்த இடம்: தெரியவில்லை) |
![]() |
| தண்ட ஹஸ்தம் - இடது கை யோக தட்சிணாமூர்த்தி, சென்னை அருங்காட்சியகம் (கிடைத்த இடம் - காவேரிப்பாக்கம், வ.ஆ.) |
அமைதி
- தோளில் இருந்து நீண்டு உடல் பக்கத்தில் தொங்கும் கை அமைதி.
- விரல்கள் பல்லவ ஹஸ்தத்தில் இருக்கும்.
- ஒடிந்த கிளை மரத்தில் இருந்து தொங்குவதைப் போன்ற அல்லது பசுவின் வாலைப் போன்ற தோற்றம் உடையது.
![]() |
| டோல ஹஸ்தம் (நன்றி: South Indian images of Gods and Godessesby Krishna Sastri. H) |
மாற்றுப் பெயர்கள்
- லோல ஹஸ்தம். லோல - முன் பின்னாக ஆடும்
- லம்ப ஹஸ்தம். லம்ப - தொங்கும்
குறிப்பு
- டோல ஹஸ்தம் ஒரு எழிற்கை.
- டோல (डोल) = ஊஞ்சல், தொட்டில்.
படிமங்கள்
- தேவியர் படிமங்கள்
![]() |
| டோல ஹஸ்தம் - இடது கை சீதை, ராமசாமி கோயில், கும்பகோணம் |
![]() |
| டோல ஹஸ்தம் - வலது கை ஸ்ரீ தேவி, மேல்கோவல்வீடு, வட ஆற்காடு மாவட்டம் சென்னை அருங்காட்சியகம் |
![]() |
| டோல ஹஸ்தம் - இடது கை பார்வதி, கொடைக்காடு, நாகப்பட்டினம் சென்னை அருங்காட்சியகம் |
பிரசாரித ஹஸ்தம்
அமைதி
- தோளில் இருந்து பக்கவாட்டில் நீண்டிருக்கும் கை அமைதி.
- விரல்கள் பல்லவ ஹஸ்தத்தில் இருக்கும்.
மாற்றுப் பெயர்கள்
- வீசிய கரம்
- நாட்டிய கரம்
குறிப்பு
- பிரசாரித ஹஸ்தம் ஒரு எழிற்கை.
- பிரசாரித (प्रसारित) = வெளி நீட்டிய
படிமங்கள்
- கூத்தாடும் விநாயகர், முருகர், சிவன், கண்ணன், சம்பந்தர் படிமங்கள்
![]() |
| பிரசாரித ஹஸ்தம் - இடது கை ஞானசம்பந்தர் சென்னை அருங்காட்சியகம் (நன்றி: Sailko, CC BY 3.0 <https://creativecommons.org/licenses/by/3.0>, via Wikimedia Commons) |
| பிரசாரித ஹஸ்தம் - இடது மேல் கை நர்த்தன விநாயகர் வங்காளம், பாலர் கலை, 11 ஆம் நூ (நன்றி: Ethnological Museum, Berlin. Daderot, CC0, via Wikimedia Commons) |
![]() |
| பிஈசாரித ஹஸ்தம் - இடது கை கூத்தாடும் கண்ணன் தஞ்சாவூர், சோழர் கலை, 13 ஆம் நூ (Honolulu Academy of Arts; Hiart, CC0, via Wikimedia Commons) |
![]() |
| பிரசாரித ஹஸ்தம் - இடது முன்கை (மேலிருந்து நான்காவது கை) கூத்தாடும் சிவன், ராவணபாடி குடைவரை, ஐஹோளே, கர்நாடகா |
நன்றிக்கடன்
- கணபதி ஸ்தபதி; சிற்பச் செந்நூல்; தொழில் நுட்பக் கல்விக் கழகம்; மூன்றாம் வெளியீடு; 2001
- Gopinatha Rao, T. A.; Elements of hindu iconography; Motilal Banarasidas Publishers Pvt Ltd; 1914 Reprint 1997.
- South Indian images of Gods and Godesses; Krishna Sastri. H; Madras Governement Press; 1916
- https://www.wisdomlib.org
- மா மாரிராஜன்; சிற்ப இலக்கணத் தொடர்; மெய் எழுத்து


.jpg)














Comments
Post a Comment