Skip to main content

Posts

Showing posts from July, 2023

கை அமைதிகள் - 14: இரட்டைக் கை அமைதிகள் நான்கு: அஞ்சலி, தியான, புஷ்பபுட, தர்ம சக்கர ஹஸ்தங்கள்

அஞ்சலி ஹஸ்தம் அமைதி இரண்டு கைகளிலும் ஐந்து விரல்களையும் நீட்டி  இரு கைகளையும் மார்புக்கு நேராக ஒன்றாக சேர்த்து வைத்து வணங்கும் கை அமைதி. கைகளுக்கு இடையே அக்க மாலை, பூ, பூ மாலை போன்றவை இருப்பதுண்டு. அஞ்சலி ஹஸ்தம் மாற்றுப் பெயர்கள் நமஸ்கார முத்திரை,  குறிப்பு அஞ்சலி ஹஸ்தம் வணங்குதலைக் குறிக்கும். படிமங்கள் புராண, வரலாற்று அடியவர்கள் அஞ்சலி ஹஸ்தம் அனுமன், ராமசாமி கோயில், கும்பகோணம் அஞ்சலி ஹஸ்தம் இலக்குவன், ராமசாமி கோயில், கும்பகோணம் அஞ்சலி ஹஸ்தம் ரகுநாத நாயக்கர், ராமசாமி கோயில், கும்பகோணம் அஞ்சலி ஹஸ்தம் அதிகார நந்தி, உருத்திராட்ச மண்டபம் அண்ணாமலையார் கோயில், திருவண்ணாமலை புடைப்பு குறைந்த தாழ், இடை புடைப்புச் சிற்பங்களில் அஞ்சலி ஹஸ்தம் இவ்வாறு விரிந்து அமையலாம். தியான ஹஸ்தம் அமைதி அமர்ந்த கோலத்தில் இடது கையை உள்ளங்கை மேல் நோக்கும்படி மடியில் வைத்து வலது கையையும் அவ்வாறே இடது கை மீது படிய வைத்திருக்கும் கை அமைதி. இரு கைகளிலும் விரல்கள் ஒன்றோடொன்று சேர்ந்து நீண்டிருக்கும். இடது கை விரல்கள் வலது பக்கம் நோக்கியும், வல்து கை விரல்கள் இடது பக்கம் நோக்கியும் நீண்டிருக்கும் தியான ஹஸ்தம் க...

கை அமைதிகள் - 13: அர்த்த சந்திர ஹஸ்தம், டமரு ஹஸ்தம்

அர்த்த சந்திர ஹஸ்தம், டமரு ஹஸ்தம் இரண்டும் சிறப்பாக ஆடலரசன் படிமத்துக்கு உரியவை.  அமைதி சுட்டு விரல் முதல் சுண்டு விரல் வரையான நான்கு விரல்களையும் சற்று வளைந்த நிலையில் ஒன்றாக சேர்த்து வைத்து,  கட்டை விரலை அவற்றில் இருந்து பிரித்து எதிர்ப்பக்கம் விரைப்பாக நீட்டி உள்ளங்கை வானத்தை பார்த்தவாறு சற்று சாய்ந்த அமைதி. அர்த்த சந்திர ஹஸ்தம் குறிப்பு அர்த்த சந்திர ஹஸ்தம் ஒரு கருவி ஒற்றைக்கை அமைதி. ஆடவல்லான் படிமத்தில் இடது பின்கரத்தில் அமைந்து தீச்சுடர் ஏந்தும். அர்த்த = பாதி. அர்த்த சந்திரன் = பிறை.  கட்டை விரலும் சுட்டுவிரலும் சேர்ந்து சந்திரனின் பிறை வடிவத்தைக் காட்டுவதால் இப்பெயர். படிமங்கள் நடராஜர். அர்த்த சந்திர ஹஸ்தம் - பின் இடது கை ஆடலரசன்,  (நன்றி: Portland art museum - Daderot, Public domain, via Wikimedia Commons) அர்த்த சந்திர ஹஸ்தம் - பின் இடது கை ஆடவல்லான், கருந்திட்டைக்குடி செம்பியன் மாதேவி திருப்பணி அர்த்த சந்திர ஹஸ்தம் சிவன் ஊர்த்துவ தாண்டவம், ஆவுடையார்கோயில் டமரு ஹஸ்தம் அமைதி நடுவிரல், மோதிர விரல்கள் ஒரு பக்கமும் கட்டை விரல் மறு பக்கமுமாக டமரு, டமருகம் எ...

கை அமைதிகள் - 12: தனுர் ஹஸ்தமும் சிகர ஹஸ்தமும்

அமைதி இரண்டும் வில் ஏந்தும் கை அமைதிகள். தனுர் ஹஸ்தம்  வில்லை பக்கத்தில் நிறுத்திப் பிடிக்கும் கை அமைதி. கை உட்புறமாக திரும்பி இருக்கும். நடுவிரலும் மோதிர விரலும் வில்லை அணைத்திருக்கும். கட்டை விரல் நுனி மறுபக்கம் வில்லைத் தொட்டுக் கொண்டிருக்கும். இந்த ஹஸ்தம் பல மட்டங்களில் காணப்படுகிறது. எனினும், சுட்டு விரலின் நுனி படிமத்தின் புருவ மட்டத்தில் அமைவது எடுப்பான தோற்றம் தரும். தனுர் ஹஸ்தம் சிகர ஹஸ்தம் அம்பை செலுத்தும்போது வில்லைத் தூக்கிப் பிடிக்கும் கை அமைதி. கட்டை விரல் கையில் இருந்து செங்குத்தாக இருக்கும். மற்ற விரல்கள் கடக ஹஸ்தத்தில் உள்ளது போல உள்ளங்கை நோக்கி மடிந்திருக்கும். சிகர ஹஸ்தம் படிமங்கள் தனுர் ஹஸ்தம் - கோதண்டராமன், திரிபுராந்தகர், சிவன், மன்மதன் சிகர ஹஸ்தம் - மகிஷாசுரமர்த்தினி,  தனுர் ஹஸ்தம் தனுர் ஹஸ்தம் - வில்லேந்தும் இடது முன் கை முருகர், ஆவுடையார்கோயில் கோதண்டராமர் - இடது கை ராமசாமி கோயில், கும்பகோணம் தனுர் ஹஸ்தம் - இடது முன் கை திரிபுராந்தகர், வல்லம், தஞ்சாவூர் மாவட்டம் சென்னை அருங்காட்சியகம் (வில் தனியாக சேர்க்கப்படும்) (நன்றி: Sailko, CC BY 3.0 <htt...

கை அமைதிகள்- -11: கர்த்தரி முக, முஷ்டி ஹஸ்தங்கள்

ஆயுதங்களை ஏந்தும் ஹஸ்தங்களை கருவி ஹஸ்தங்கள் எனலாம்.  ஏழு கருவி ஹஸ்தங்களுள் நான்கு ஒரு வகை ஆயுதத்தை மட்டும் ஏந்துபவை. சிகர ஹஸ்தமும், தனுர் ஹஸ்தமும் வில்லை மட்டும் ஏந்துவன. டமரு ஹஸ்தம் டமருவையும், அர்த்த சந்திர ஹஸ்தம் தீயையும் நடராஜர் படிமங்களில் ஏந்துபவை. அவ்வாறின்றி பல்வகை ஆயுதங்களையும் ஏந்தும் கருவி ஹஸ்தங்கள் மூன்று:  கடகம், கர்த்தரி முகம், முஷ்டி . கடக ஹஸ்தம் அதனுடன் மிக நெருங்கிய கருத்து ஹஸ்தமான சிம்மகர்ண ஹஸ்தத்துடன் சேர்த்து வேறொரு பதிவில் விவரிக்கப்பட்டுள்ளது. இங்கு கர்த்தரி முகமும், முஷ்டியும். கர்த்தரி முக ஹஸ்தம் அமைதி கையிலிருந்து நடு விரலும், சுட்டுவிரலும் நீண்டிருக்கும்.  நடு விரல் சற்று முன்னோக்கியும், சுட்டு விரல் சற்று பின்னோக்கியும் கத்தரி போன்று அமையும். அணிவிரலும், பெரு விரலும் வளைந்து உள்ளங்கையில் நெருங்கி அமையும்.  சிறு விரல் சிறிது வளைந்து இருக்கும்.  மேற்கைகளில் மேல் நோக்கி அமையும். கர்த்தரி முக ஹஸ்தம் கருத்து கர்த்தரி  = கத்தரி. இது ஆயுதங்கள் ஏந்தும் ஒரு கருவி ஹஸ்தம். படிமங்கள் திருமால், சிவன், பிரம்மா, துர்க்கை, முருகர் முதலிய பல ...