Skip to main content

கை அமைதிகள் - 14: இரட்டைக் கை அமைதிகள் நான்கு: அஞ்சலி, தியான, புஷ்பபுட, தர்ம சக்கர ஹஸ்தங்கள்

அஞ்சலி ஹஸ்தம்


அமைதி
  • இரண்டு கைகளிலும் ஐந்து விரல்களையும் நீட்டி 
  • இரு கைகளையும் மார்புக்கு நேராக ஒன்றாக சேர்த்து வைத்து
  • வணங்கும் கை அமைதி.
  • கைகளுக்கு இடையே அக்க மாலை, பூ, பூ மாலை போன்றவை இருப்பதுண்டு.
அஞ்சலி ஹஸ்தம்

மாற்றுப் பெயர்கள்

நமஸ்கார முத்திரை, 

குறிப்பு
  • அஞ்சலி ஹஸ்தம் வணங்குதலைக் குறிக்கும்.
படிமங்கள்
  • புராண, வரலாற்று அடியவர்கள்
அஞ்சலி ஹஸ்தம்
அனுமன், ராமசாமி கோயில், கும்பகோணம்

அஞ்சலி ஹஸ்தம்
இலக்குவன், ராமசாமி கோயில், கும்பகோணம்

அஞ்சலி ஹஸ்தம்
ரகுநாத நாயக்கர், ராமசாமி கோயில், கும்பகோணம்

அஞ்சலி ஹஸ்தம்
அதிகார நந்தி, உருத்திராட்ச மண்டபம்
அண்ணாமலையார் கோயில், திருவண்ணாமலை
புடைப்பு குறைந்த தாழ், இடை புடைப்புச் சிற்பங்களில் அஞ்சலி ஹஸ்தம் இவ்வாறு விரிந்து அமையலாம்.

தியான ஹஸ்தம்

அமைதி
  • அமர்ந்த கோலத்தில்
  • இடது கையை உள்ளங்கை மேல் நோக்கும்படி மடியில் வைத்து
  • வலது கையையும் அவ்வாறே இடது கை மீது படிய வைத்திருக்கும் கை அமைதி.
  • இரு கைகளிலும் விரல்கள் ஒன்றோடொன்று சேர்ந்து நீண்டிருக்கும்.
  • இடது கை விரல்கள் வலது பக்கம் நோக்கியும், வல்து கை விரல்கள் இடது பக்கம் நோக்கியும் நீண்டிருக்கும்
தியான ஹஸ்தம்

குறிப்பு
  • தியான நிலையைக் குறிக்கும்.
படிமங்கள்
  • தியான நிலை புத்தர்
  • அமர்ந்த நிலை தீர்தங்கரர்கள்
  • தியான நிலை புனிதர்கள்
தியான ஹஸ்தம்
தீர்த்தங்கரர், திறக்கோயில், திருவண்ணாமலை மாவட்டம்

தியான ஹஸ்தம்
புத்தர், கணிகிளுப்பை, திருவண்ணாமலை மாவட்டம்

ஓற்றைக் கை தியான ஹஸ்தம்
  • ஒரு கையை மட்டும் தியான ஹஸ்தத்தில் வைப்பதும் உண்டு.
  • அது பெரும்பாலும் இடது கையாகவே இருக்கும்.
  • ஒற்றைக் கை தியான ஹஸ்தம் புத்தர், பிரம்மா, ஆழ்வார்கள் படிமங்களில் அமையும்.
ஓற்றைக் கை தியான ஹஸ்தம் - இடது கை
(வலது கை அபய ஹஸ்தம்)
புத்தர், புத்த கயா, 11 ஆம் நூற்றாண்டு பாலர் கலை
(© The Trustees of the British Museum; under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International (CC BY-NC-SA 4.0)
 licence.)

ஓற்றைக் கை தியான ஹஸ்தம் - இடது கை
(வலது கை வியாக்கியான ஹஸ்தம்)
நம்மாழ்வார், நஞ்சங்கூடு, 11 ஆம் நூற்றாண்டு
பெங்களூரு அருங்காட்சியகம்

புஷ்பபுட ஹஸ்தம்
  • வரத ஹஸ்தத்தில் அமைந்த இரு கைகளையும் சேர்த்து
  • மார்புக்கு முன் பிடித்து
  • விரல் நுனிகளை உட்புறமாக சிறிது மடித்து
  • பூக்குடலை போல் உள்ள கை அமைதி புஷ்ப புடம்.
புஷ்ப புட ஹஸ்தம்

குறிப்பு
  • புஷ்ப புடம் - புஷ்பம் = பூ; புடம் = கலம். பூக்கள் நிறைந்த கலத்தைக் குறிக்கும்.
  • புஷ்ப புட ஹஸ்தம் மலர் கொண்டு வணங்கும் பாவனையைச் சுட்டும். 
  • பரத நாட்டிய அரங்கில் முதல் நிகழ்வாக நாட்டியம் ஆடுபவர் புஷ்பபுட முத்திரையினால் மலர் தூவி நடராஜருக்கு மலரஞ்சலி செலுத்துவர்.
  • புஷ்ப புட ஹஸ்தத்தில் உள்ள இரு கைகளும் பிரிந்து தொப்புள் மட்டத்திற்கு கீழ் அமைந்தால் அது அழைக்கும் பாவனையை உணர்த்தும். 
  • இக்கைகளை அபய முத்திரையுடன் நடுவிரலும், அணிவிரலும் முன்னோக்கி வளைந்து அமைந்தாலும் இதே கருத்தை உணர்த்தும். எடுத்துக்காட்டு குழந்தை முருகனை உமை இந்த கை அமைதியால் அழைப்பது.
படிமங்கள்
  • புஷ்ப புட ஹஸ்தம் நடன, அடியவர் படிமங்களுக்கு ஏற்றது.
புஷ்ப புட ஹஸ்தம்
தல புஷ்பபுட கரணம், கும்பகோணம்
(நன்றி: www.wisdomlib.org/uploads/photos/talapuspaputa-karana.jpg)

புஷ்பபுட ஹஸ்தத்தில் பூங்கலம் ஏந்தும் பெண்
வளைகாப்பு மண்டபம், அண்ணாமலையார் கோயில், திருவண்ணாமலை

தர்மசக்கர ஹஸ்தம்
 
தர்ம சக்கர ஹஸ்தம் இருவகை அமைதிகளைக் கொண்டது.

அமைதி - முதல் வகை:
  • வலது கை அபய ஹஸ்தமாய் மார்பின் முன் இருக்கும். 
  • அதன் சுட்டு விரல் மட்டும் முன்னோக்கி வளைந்திருக்கும்.
  • இடது கை உள்ளங்கை உள்நோக்கி இருக்கும்.
  • அதன் சுட்டு விரல் நுனியும் கட்டை விரல் நுனியும் சேர்ந்து யோக ஹஸ்தமாய் அமையும்.
  • இடது கையின் நடு விரலும் வலது கையின் சுட்டு விரலும் அருகே இருக்குமாறு கைகள் அமையும்.
தர்ம சக்கர ஹஸ்தம் - முதல் வகை

அமைதி - இரண்டாம் வகை:
  • இரு கைகளிலும் சுட்டு விரல் நுனி கட்டை விரல் நுனியை தொட்டு வட்டம் அமைத்திருக்க மற்ற மூன்று விரல்கள் நீண்டிருக்கும். 
  • வலது கை உள்ளங்கை வெளிப்புறமாக நோக்கி வியாக்கியான ஹஸ்தமாய் அமைந்திருக்கும்.
  • இடது கை உள்ளங்கை உள்நோக்கி யோக ஹஸ்தமாய் அமைந்திருக்கும்.
  • இரு கைகளும் மார்புக்கு முன் அருகருகே அமைந்திருக்கும்
குறிப்பு
  • தர்ம சக்கர முத்திரை தர்ம சக்கரத்தை இயக்கி விடுவதை உணர்த்தும்.
  • ஞானம் அடைந்த பிறகு புத்தர் சாரநாத்தில் முதல் அற விளக்க உரை நிகழ்த்தியதை குறிக்கும்.
  • இரு கைகளிலும் நீண்டுள்ள மூன்று விரல்களுக்கும் புத்த மத தத்துவ விளக்கங்கள் உண்டு. எடுத்துக்காட்டாக, இடது கையின் மூன்று நீண்ட விரல்கள் புத்த மதத்தின் மூன்று ரத்தினங்களான புத்தர், தம்மம், சங்கம் ஆகியவற்றைக் குறிக்கும்.
  • கைகள் மார்பருகில் உள்ளது புத்தரின் போதனைகள் அவரது உள்ளத்திலிருந்து வருவதைக் குறிக்கும்.
மாற்றுப் பெயர்கள்
  • தர்ம சக்கர பிரவர்த்தன ஹஸ்தம்
  • அறவாழிக்கை
படிமம்
  • தர்ம சக்கர முத்திரை புத்தர் படிமத்துக்கே உரியது.
தர்ம சக்கர ஹஸ்தம் - முதல் வகை
(நன்றி: Art Institute of Chicago, CC0, via Wikimedia Commons)

வலது கை வெளி முகமாகவும் இடது கை உள் முகமாகவும் உள்ளது. வலது கையின் சுட்டு விரலும் இடது கையின் நடு விரலும் தொட்டுக் கொண்டுள்ளன. 

(நன்றி: British Museum, CC BY 3.0 <https://creativecommons.org/licenses/by/3.0>, via Wikimedia Commons)
நன்றிக்கடன்
  • கணபதி ஸ்தபதி; சிற்பச் செந்நூல்; தொழில் நுட்பக் கல்விக் கழகம்; மூன்றாம் வெளியீடு; 2001









Comments

Popular posts from this blog

கை அமைதிகள் 1: அறிமுகம்

கணபதி ஸ்தபதியாரின் 'சிற்பச் செந்நூல்' சிற்பக் கலையின் அடிப்படை இலக்கணங்களை விளக்கும் இக்காலத்தின் முதன்மை நூலாகத் திகழ்கிறது. அதன் அடிப்படையில் ' ஹஸ்தங்கள்'  என்னும் கை அமைதிகளைபடங்களுடன் விளக்கும் முயற்சி இது.  கை விரல்களை 'நீட்டுதல், மடக்குதல், கூட்டுதல், விலக்குதல், குவித்தல்' ஆகிய ஐந்து நிலைகளின் அடிப்படையில், கை அமைதிகளை ஒரு பொருளை அல்லது கருத்தைச் சுட்டும் குறியீடுகளாக ஆடற் கலையில் வரையறுத்துள்ளனர். ஆடற் கலையின் இந்தக் கை அமைதிகள் 'முத்திரைகள் அல்லது பிடிகள்' எனப்படும். சிற்பக்கலையில் இந்தக் கை அமைதிகள் சில மாற்றங்களோடும், பெயர் வேறுபாடுகளோடும் வழங்கி வருகின்றன. சிற்பக் கலையில் கை அமைதி 'ஹஸ்தம்' எனப்படுகிறது.  வகைப்பாடு கை அமைதிகளின் வகைப்பாடு கை அமைதிகள் இரு வகைப்படும் தொழிற் கைகள் - ஆயுதங்கள் முதலிய கருவிகளை ஏந்தியோ அல்லது கருவிகள் ஏதும் இன்றி ஒரு கருத்தை சுட்டியோ அமையும் கைகள். எழிற் கைகள் - எந்த கருவியும் இல்லாமல், எந்த கருத்தையும் குறிக்காமல் சிற்பத்தின் சமநிலைக்காகவும் எழிலுக்காகவும் அமையும் கைகள். தொழிற் கைகள் இருவகைப்படும்...

திருக்கோலங்கள் (ஆசனங்கள்)

ஆடற்கலை, யோகம், மக்களின் வாழ்வில் காணப்படும் இயல்பான அமைதிகள் இவற்றில் உள்ள கூறுகளைத் தொகுத்து தன் தேவைக்கேற்ப இலக்கணம் வகுத்து வகைமைப் படுத்திக் கொண்டது சிற்பக்கலை. தெரிந்ததன் மூலம் தெரியாததை விளக்கும் முயற்சி. கணபதி ஸ்தபதியாரின் 'சிற்பச் செந்நூல்' சிற்பக் கலையின் அடிப்படை இலக்கணங்களை விளக்கும் இக்காலத்தின் முதன்மை நூலாகத் திகழ்கிறது. அதன் அடிப்படையில் திருக்கோலம் என்னும் ஆசனங்களை படங்களுடன் விளக்கும் முயற்சி இது. அவர் குறிப்பிட்டிற்கும் வகைமைகளுக்குள் துணை வகைமைகளை உருவாக்கி திருக்கோலங்கள் வரிசைப் படுத்தப்படுள்ளன. திருக்கோலம் என்பது படிமங்களின் உடல் அமைதியைக் குறிக்கும். குறிப்பாக கால் அமைதிகளைக் குறிக்கும், 'ஹஸ்தம்' கை அமைதியைக் குறிப்பது போல.  வடமொழியில் திருக்கோலம் ' ஆசனம்' எனப்படும்.  'ஆசனம்' என்னும் சொல் பொதுவாக அமர்ந்த கோலத்தைக் குறிக்கும். அதே சமயம் சிற்பக்கலைச் சொல்லாக 'கோலம்' (தோன்றும் நிலை) என்றும் பொருள் தரும். 'ஆசனம்' இருக்கை, பீடம் என்றும் பொருள் தரும். எனவே 'ஆசனம்' என்ற சொல்லுக்கு சிற்பக் கலையில் மூன்று பொருள்கள் உ...

சிற்ப வகைகள்

சிற்ப வகைகள் சிற்பங்களை அவற்றின் உருவ அமைப்பு அடிப்படையில் முழு உருவச் சிற்பங்கள், புடைப்புச் சிற்பங்கள் என இரண்டாகப் பிரிக்கலாம். முழு உருவச் சிற்பம் (சித்திரம்)  - எல்லா உறுப்புகளும் முழுமையாகவும், உரிய  அளவு அமைப்புடனும் அமைந்து உருவத்தின் முன்பகுதியும் பின்பகுதியும் தெளிவாகத் தெரியும் வகையில் அமைந்த சிற்பங்கள் இவை.  கீழ் பக்கத்தை தவிர மற்ற பக்கங்கள் எதையும் சாராமல் தனித்து நிற்கும் தன்மை உடையவை. உலோகப்படிமங்கள் சிறந்த எடுத்துக்காட்டு.  'பூர்ண சித்திரம்'  என்றும் பெயருண்டு. அர்த்தநாரி சென்னை அருங்காட்சியகம் நன்றி: Sailko, CC BY 3.0 <https://creativecommons.org/licenses/by/3.0>, via Wikimedia Commons) புடைப்புச் சிற்பம் (சித்ரார்த்தம்)  -  முற்பகுதி உறுப்புகள் மட்டும் அமைக்கப்பட்டு பின் பகுதி உறுப்புகள் இல்லாத சிற்பம். சுவர், விதானம், பாறை, தரை ஆகியவற்றில் இருந்து வெளியே புடைத்துக் கொண்டிருக்கும். ( சுவர், திரைச்சீலை, பலகை, காகிதம் முதலியவற்றின் மீது புடைப்பின்றி வரையப்படும் ஓவியம்  ' சித்ராபாசம்'  எனப்படும்   . படம் என்றும்...