கடக ஹஸ்தம் அமைதி கட்டை விரல் நீட்டப்பட்டு சற்று உள்புறமாக வளைந்திருக்கும். நடுவிரலும் அணிவிரலும் ஒன்றோடொன்று இணைந்து அவற்றின் மூன்று கணுக்களும் கீழ் முட்டில் முன்னோக்கி வளைந்திருக்கும். சுட்டுவிரலும், சுண்டு விரலும் அவற்றின் மேல் இரு கணுக்கள் மட்டும் இரண்டாம் முட்டில் சற்று கீழ் நோக்கி வளைந்திருக்கும். நடுவிரல் நுனி அணிவிரல் நுனியை விட சற்று முன்னோக்கி இருக்கும். கடக முத்திரை குறிப்பு கடகம் = நண்டு. இது ஒரு கருவி ஒற்றை தொழிற்கை. கடக ஹஸ்தம் மலர், பாசம், அங்குசம், தண்டம், கத்தி, அம்பு முதலிய பல்வகை ஆயுதங்களை பிடிக்க பயன்படுகிறது. ஏழு கருவி ஒற்றைத் தொழிற்கைகளுள் கடக ஹஸ்தம், கர்த்தரி முக ஹஸ்தம், முஷ்டி ஹஸ்தம் மூன்றும் இவ்வாறு பல்வகை ஆயுதங்களை ஏந்துபவை. சிகர ஹஸ்தம், தனுர் ஹஸ்தம் இரண்டும் வில் மட்டுமே ஏந்துபவை. டமரு ஹஸ்தம் டமருவையும், அர்த்த சந்திர ஹஸ்தம் தீயையும் நடராஜர் படிமங்களில் ஏந்துபவை. கடக ஹஸ்தம் - பிள்ளையார் வலது மேல் கை கடக ஹஸ்தத்தில் அங்குசம் இடது மேல் கை கடக ஹஸ்தத்தில் பாசம் வலது முன் கடக ஹஸ்தத்தில் தந்தம் ருத்திராட்ச மண்டபம், அண்ணாமலையார் கோயில், திருவண்ண...