Skip to main content

கை அமைதிகள் - 6: கடி ஹஸ்தமும், ஊரு ஹஸ்தமும்


அமைதி
  • உடல் பக்கத்தில் தொங்கும் கை, இடுப்பில் படிந்திருக்கும் அமைதி கடி ஹஸ்தம். கடி (कटि) = இடுப்பு
  • உடல் பக்கத்தில் தொங்கும் கை, தொடையில் படிந்திருக்கும் அமைதி ஊரு ஹஸ்தம். ஊரு = தொடை
  • கட்டை விரல் மற்ற விரல்களில் இருந்து விலகி பிகுவாக இடுப்பில் / தொடையில் ஊன்றியிருக்கும்,
  • மற்ற விரல்களும் உள்ளங்கையையும் இடுப்பில் / தொடையில் படிந்திருக்கும்.
  • நடு விரலும் மோதிர விரலும் உடலில் நன்கு படிந்திருக்கும். சுட்டு விரலும் சிறு விரலும் உடலில் இருந்து சற்று விலகி இருக்கும்.
  • கடி ஹஸ்தத்தில் முழங்கை சற்று வளைந்திருக்கும். ஊரு ஹஸ்தத்தில் முழங்கை நீண்டிருக்கும்.
  • கடி ஹஸ்தத்தில் கட்டை விரல் தவிர்த்த மற்ற விரல்கள் சற்று மேல் நோக்கி இருக்கும். ஊரு ஹஸ்தத்தில் கட்டை விரல் தவிர்த்த மற்ற விரல்கள் தரைக்கு சம மட்டத்தில் இருக்கும்.

கடி ஹஸ்தம்  -  ஊரு ஹஸ்தம்

மாற்றுப் பெயர்கள்
  • ஊரு ஹஸ்தம் - கடியவலம்பிதம் (कट्यवलम्बितहस्त) என்றும் அழைக்கப்படும். இடுப்புக்கு கீழ் தொங்கி அமையும் கை அமைதி ஆதலால் இப்பெயர்,
  • கடி ஹஸ்தம், கடிக ஹஸ்தம் என்றும் அழைக்கப்படும்.
குறிப்பு

இந்த ஹஸ்தங்கள் இலகுவான நிலையையும் தன்னம்பிக்கையையும் காட்டுகின்றன.

படிமங்கள்
  • கடி ஹஸ்தம் துர்க்கை, பிரம்மா முதலிய பல படிமங்களில் காணப்படும்.
  • ஊரு ஹஸ்தம் சிறப்பாக திருமால், முருகர் படிமங்களில் காணப்படும்.
கடி ஹஸ்தம் - இடது முன் கை
துர்க்கை, சென்னை அருங்காட்சியகம்

ஊரு ஹஸ்தம் - இடது முன் கை
நான்முகன், அபிமுகுந்தேஸ்வரர் கோயில், கும்பகோணம்

கடி ஹஸ்தம் - இடது முன் கை
நான்முகன் சிவபுரம்

ஊரு ஹஸ்தம் - இடது முன் கை
ஹரிஹரர், ஆவுடையார்கோயில்

நடைமுறையில் கடி ஹஸ்தம், ஊரு ஹஸ்தம் இரண்டையும் வேறுபடுத்துவது கடினமாயிருக்கலாம். இரண்டையும் 'கடியவிலம்பிதம்' என்று கூறுவதும் உண்டு. 

நன்றிக்கடன்
  • கணபதி ஸ்தபதி; சிற்பச் செந்நூல்; தொழில் நுட்பக் கல்விக் கழகம்; மூன்றாம் வெளியீடு; 2001
  • Gopinatha Rao, T. A.; Elements of hindu iconography; Motilal Banarasidas Publishers Pvt Ltd; 1914 Reprint 1997.
  • South Indian images of Gods and Godesses; Krishna Sastri. H; Madras Governement Press; 1916
  • https://www.wisdomlib.org
  • மா மாரிராஜன்; சிற்ப இலக்கணத் தொடர்; மெய் எழுத்து.
  • BHU Swayam - Iconography of Major Hindu Deities




Comments

Popular posts from this blog

கை அமைதிகள் 1: அறிமுகம்

கணபதி ஸ்தபதியாரின் 'சிற்பச் செந்நூல்' சிற்பக் கலையின் அடிப்படை இலக்கணங்களை விளக்கும் இக்காலத்தின் முதன்மை நூலாகத் திகழ்கிறது. அதன் அடிப்படையில் ' ஹஸ்தங்கள்'  என்னும் கை அமைதிகளைபடங்களுடன் விளக்கும் முயற்சி இது.  கை விரல்களை 'நீட்டுதல், மடக்குதல், கூட்டுதல், விலக்குதல், குவித்தல்' ஆகிய ஐந்து நிலைகளின் அடிப்படையில், கை அமைதிகளை ஒரு பொருளை அல்லது கருத்தைச் சுட்டும் குறியீடுகளாக ஆடற் கலையில் வரையறுத்துள்ளனர். ஆடற் கலையின் இந்தக் கை அமைதிகள் 'முத்திரைகள் அல்லது பிடிகள்' எனப்படும். சிற்பக்கலையில் இந்தக் கை அமைதிகள் சில மாற்றங்களோடும், பெயர் வேறுபாடுகளோடும் வழங்கி வருகின்றன. சிற்பக் கலையில் கை அமைதி 'ஹஸ்தம்' எனப்படுகிறது.  வகைப்பாடு கை அமைதிகளின் வகைப்பாடு கை அமைதிகள் இரு வகைப்படும் தொழிற் கைகள் - ஆயுதங்கள் முதலிய கருவிகளை ஏந்தியோ அல்லது கருவிகள் ஏதும் இன்றி ஒரு கருத்தை சுட்டியோ அமையும் கைகள். எழிற் கைகள் - எந்த கருவியும் இல்லாமல், எந்த கருத்தையும் குறிக்காமல் சிற்பத்தின் சமநிலைக்காகவும் எழிலுக்காகவும் அமையும் கைகள். தொழிற் கைகள் இருவகைப்படும்...

திருக்கோலங்கள் (ஆசனங்கள்)

ஆடற்கலை, யோகம், மக்களின் வாழ்வில் காணப்படும் இயல்பான அமைதிகள் இவற்றில் உள்ள கூறுகளைத் தொகுத்து தன் தேவைக்கேற்ப இலக்கணம் வகுத்து வகைமைப் படுத்திக் கொண்டது சிற்பக்கலை. தெரிந்ததன் மூலம் தெரியாததை விளக்கும் முயற்சி. கணபதி ஸ்தபதியாரின் 'சிற்பச் செந்நூல்' சிற்பக் கலையின் அடிப்படை இலக்கணங்களை விளக்கும் இக்காலத்தின் முதன்மை நூலாகத் திகழ்கிறது. அதன் அடிப்படையில் திருக்கோலம் என்னும் ஆசனங்களை படங்களுடன் விளக்கும் முயற்சி இது. அவர் குறிப்பிட்டிற்கும் வகைமைகளுக்குள் துணை வகைமைகளை உருவாக்கி திருக்கோலங்கள் வரிசைப் படுத்தப்படுள்ளன. திருக்கோலம் என்பது படிமங்களின் உடல் அமைதியைக் குறிக்கும். குறிப்பாக கால் அமைதிகளைக் குறிக்கும், 'ஹஸ்தம்' கை அமைதியைக் குறிப்பது போல.  வடமொழியில் திருக்கோலம் ' ஆசனம்' எனப்படும்.  'ஆசனம்' என்னும் சொல் பொதுவாக அமர்ந்த கோலத்தைக் குறிக்கும். அதே சமயம் சிற்பக்கலைச் சொல்லாக 'கோலம்' (தோன்றும் நிலை) என்றும் பொருள் தரும். 'ஆசனம்' இருக்கை, பீடம் என்றும் பொருள் தரும். எனவே 'ஆசனம்' என்ற சொல்லுக்கு சிற்பக் கலையில் மூன்று பொருள்கள் உ...

சிற்ப வகைகள்

சிற்ப வகைகள் சிற்பங்களை அவற்றின் உருவ அமைப்பு அடிப்படையில் முழு உருவச் சிற்பங்கள், புடைப்புச் சிற்பங்கள் என இரண்டாகப் பிரிக்கலாம். முழு உருவச் சிற்பம் (சித்திரம்)  - எல்லா உறுப்புகளும் முழுமையாகவும், உரிய  அளவு அமைப்புடனும் அமைந்து உருவத்தின் முன்பகுதியும் பின்பகுதியும் தெளிவாகத் தெரியும் வகையில் அமைந்த சிற்பங்கள் இவை.  கீழ் பக்கத்தை தவிர மற்ற பக்கங்கள் எதையும் சாராமல் தனித்து நிற்கும் தன்மை உடையவை. உலோகப்படிமங்கள் சிறந்த எடுத்துக்காட்டு.  'பூர்ண சித்திரம்'  என்றும் பெயருண்டு. அர்த்தநாரி சென்னை அருங்காட்சியகம் நன்றி: Sailko, CC BY 3.0 <https://creativecommons.org/licenses/by/3.0>, via Wikimedia Commons) புடைப்புச் சிற்பம் (சித்ரார்த்தம்)  -  முற்பகுதி உறுப்புகள் மட்டும் அமைக்கப்பட்டு பின் பகுதி உறுப்புகள் இல்லாத சிற்பம். சுவர், விதானம், பாறை, தரை ஆகியவற்றில் இருந்து வெளியே புடைத்துக் கொண்டிருக்கும். ( சுவர், திரைச்சீலை, பலகை, காகிதம் முதலியவற்றின் மீது புடைப்பின்றி வரையப்படும் ஓவியம்  ' சித்ராபாசம்'  எனப்படும்   . படம் என்றும்...