Skip to main content

கை அமைதிகள் - 5: அலபத்ம ஹஸ்தமும் விஸ்மயா ஹஸ்தமும்


அலபத்ம ஹஸ்தம்

அமைதி
  • எல்லா விரல்களும் ஒன்றைவிட்டு ஒன்று பிரிந்து, விரிந்த தாமரை மலர் போல தோற்றம் தரும். 
  • சிறு விரலில் இருந்து மற்ற விரல்கள் படிப்படியாக சரிந்ததாக அமையும்.
  • உள்ளங்கை மேல் நோக்கி இருக்கும்.
அலபத்ம ஹஸ்தம்

கருத்து
  • அலபத்மம் = அல + பத்மம் = விரிந்த தாமரை.
  • அலபத்ம ஹஸ்தம் மகிழ்ச்சியை உணர்த்தும் கருத்துக் கை அமைதி. .
படிமங்கள்

துவாரபாலகர் - நடு உடலை அணுகியதாகவோ, மேற் கரத்திலோ அமையும்.

அலபத்ம ஹஸ்தம்
துவாரபாலகர், தஞ்சாவூர் பெரிய கோயிலின் முருகர் கோயில்
(நன்றி: Parvathisri, CC BY-SA 3.0 <https://creativecommons.org/licenses/by-sa/3.0>, via Wikimedia Commons)

விஸ்மய ஹஸ்தம்

அமைதி
  • அலபத்மத்தில் உள்ளது போலவே எல்லா விரல்களும் ஒன்றைவிட்டு ஒன்று பிரிந்து, கை விரிந்த தாமரை மலர் போல தோற்றம் தரும்.
  • வேறுபாடு - கை செங்குத்தாக அமைந்து புறங்கை வெளிப்புறமாகவும் உள்ளங்கை உட்புறமாகவும் இருக்கும்.
விஸ்மய ஹஸ்தம்

கருத்து
  • விஸ்மய = வியப்பு
  • விஸ்மய ஹஸ்தம் வியப்பை உணர்த்தும்  கருத்துக் கை அமைதி.
படிமங்கள்
  • துவாரபாலகர் 
  • சிவனின் கஜசம்ஹார, காலசம்ஹர மூர்த்திகள்
  • சிவனின் சில நாட்டிய வடிவங்கள்
  • இரண்யவத நரசிம்மர்
விஸ்மய ஹஸ்தம் 
தக்கோலம் ஜலநாதீசுவரர் கோயில்

விஸ்மய ஹஸ்தம்
இரண்யனை வதம் செய்யும் ஆளறி
பிரம்ம தீர்த்த மண்டபம், அண்ணாமலையார் கோயில், திருவண்ணாமலை

நன்றிக்கடன்
  • கணபதி ஸ்தபதி; சிற்பச் செந்நூல்; தொழில் நுட்பக் கல்விக் கழகம்; மூன்றாம் வெளியீடு; 2001
  • Gopinatha Rao, T. A.; Elements of hindu iconography; Motilal Banarasidas Publishers Pvt Ltd; 1914 Reprint 1997.
  • South Indian images of Gods and Godesses; Krishna Sastri. H; Madras Governement Press; 1916
  • https://www.wisdomlib.org
  • மா மாரிராஜன்; சிற்ப இலக்கணத் தொடர்; மெய் எழுத்து

Comments

Popular posts from this blog

கை அமைதிகள் 1: அறிமுகம்

கணபதி ஸ்தபதியாரின் 'சிற்பச் செந்நூல்' சிற்பக் கலையின் அடிப்படை இலக்கணங்களை விளக்கும் இக்காலத்தின் முதன்மை நூலாகத் திகழ்கிறது. அதன் அடிப்படையில் ' ஹஸ்தங்கள்'  என்னும் கை அமைதிகளைபடங்களுடன் விளக்கும் முயற்சி இது.  கை விரல்களை 'நீட்டுதல், மடக்குதல், கூட்டுதல், விலக்குதல், குவித்தல்' ஆகிய ஐந்து நிலைகளின் அடிப்படையில், கை அமைதிகளை ஒரு பொருளை அல்லது கருத்தைச் சுட்டும் குறியீடுகளாக ஆடற் கலையில் வரையறுத்துள்ளனர். ஆடற் கலையின் இந்தக் கை அமைதிகள் 'முத்திரைகள் அல்லது பிடிகள்' எனப்படும். சிற்பக்கலையில் இந்தக் கை அமைதிகள் சில மாற்றங்களோடும், பெயர் வேறுபாடுகளோடும் வழங்கி வருகின்றன. சிற்பக் கலையில் கை அமைதி 'ஹஸ்தம்' எனப்படுகிறது.  வகைப்பாடு கை அமைதிகளின் வகைப்பாடு கை அமைதிகள் இரு வகைப்படும் தொழிற் கைகள் - ஆயுதங்கள் முதலிய கருவிகளை ஏந்தியோ அல்லது கருவிகள் ஏதும் இன்றி ஒரு கருத்தை சுட்டியோ அமையும் கைகள். எழிற் கைகள் - எந்த கருவியும் இல்லாமல், எந்த கருத்தையும் குறிக்காமல் சிற்பத்தின் சமநிலைக்காகவும் எழிலுக்காகவும் அமையும் கைகள். தொழிற் கைகள் இருவகைப்படும்...

சிற்ப வகைகள்

சிற்ப வகைகள் சிற்பங்களை அவற்றின் உருவ அமைப்பு அடிப்படையில் முழு உருவச் சிற்பங்கள், புடைப்புச் சிற்பங்கள் என இரண்டாகப் பிரிக்கலாம். முழு உருவச் சிற்பம் (சித்திரம்)  - எல்லா உறுப்புகளும் முழுமையாகவும், உரிய  அளவு அமைப்புடனும் அமைந்து உருவத்தின் முன்பகுதியும் பின்பகுதியும் தெளிவாகத் தெரியும் வகையில் அமைந்த சிற்பங்கள் இவை.  கீழ் பக்கத்தை தவிர மற்ற பக்கங்கள் எதையும் சாராமல் தனித்து நிற்கும் தன்மை உடையவை. உலோகப்படிமங்கள் சிறந்த எடுத்துக்காட்டு.  'பூர்ண சித்திரம்'  என்றும் பெயருண்டு. அர்த்தநாரி சென்னை அருங்காட்சியகம் நன்றி: Sailko, CC BY 3.0 <https://creativecommons.org/licenses/by/3.0>, via Wikimedia Commons) புடைப்புச் சிற்பம் (சித்ரார்த்தம்)  -  முற்பகுதி உறுப்புகள் மட்டும் அமைக்கப்பட்டு பின் பகுதி உறுப்புகள் இல்லாத சிற்பம். சுவர், விதானம், பாறை, தரை ஆகியவற்றில் இருந்து வெளியே புடைத்துக் கொண்டிருக்கும். ( சுவர், திரைச்சீலை, பலகை, காகிதம் முதலியவற்றின் மீது புடைப்பின்றி வரையப்படும் ஓவியம்  ' சித்ராபாசம்'  எனப்படும்   . படம் என்றும்...

கை அமைதிகள் - 14: இரட்டைக் கை அமைதிகள் நான்கு: அஞ்சலி, தியான, புஷ்பபுட, தர்ம சக்கர ஹஸ்தங்கள்

அஞ்சலி ஹஸ்தம் அமைதி இரண்டு கைகளிலும் ஐந்து விரல்களையும் நீட்டி  இரு கைகளையும் மார்புக்கு நேராக ஒன்றாக சேர்த்து வைத்து வணங்கும் கை அமைதி. கைகளுக்கு இடையே அக்க மாலை, பூ, பூ மாலை போன்றவை இருப்பதுண்டு. அஞ்சலி ஹஸ்தம் மாற்றுப் பெயர்கள் நமஸ்கார முத்திரை,  குறிப்பு அஞ்சலி ஹஸ்தம் வணங்குதலைக் குறிக்கும். படிமங்கள் புராண, வரலாற்று அடியவர்கள் அஞ்சலி ஹஸ்தம் அனுமன், ராமசாமி கோயில், கும்பகோணம் அஞ்சலி ஹஸ்தம் இலக்குவன், ராமசாமி கோயில், கும்பகோணம் அஞ்சலி ஹஸ்தம் ரகுநாத நாயக்கர், ராமசாமி கோயில், கும்பகோணம் அஞ்சலி ஹஸ்தம் அதிகார நந்தி, உருத்திராட்ச மண்டபம் அண்ணாமலையார் கோயில், திருவண்ணாமலை புடைப்பு குறைந்த தாழ், இடை புடைப்புச் சிற்பங்களில் அஞ்சலி ஹஸ்தம் இவ்வாறு விரிந்து அமையலாம். தியான ஹஸ்தம் அமைதி அமர்ந்த கோலத்தில் இடது கையை உள்ளங்கை மேல் நோக்கும்படி மடியில் வைத்து வலது கையையும் அவ்வாறே இடது கை மீது படிய வைத்திருக்கும் கை அமைதி. இரு கைகளிலும் விரல்கள் ஒன்றோடொன்று சேர்ந்து நீண்டிருக்கும். இடது கை விரல்கள் வலது பக்கம் நோக்கியும், வல்து கை விரல்கள் இடது பக்கம் நோக்கியும் நீண்டிருக்கும் தியான ஹஸ்தம் க...