அமைதி கடக ஹஸ்தத்தில் சுட்டு விரலை செங்குத்தாக நீட்டிய அமைதி சூசி ஹஸ்தம். சூசி ஹஸ்தத்தில் சுட்டு விரலையும் கையையும் சற்று பின்னால் சாய்த்த அமைதி தர்ஜனி ஹஸ்தம் . கீழ் நோக்கி சுட்டு விரலை நீட்டிய அமைதியும் சூசி ஹஸ்தமே. சூசி ஹஸ்தம் (From Elements of hindu iconography by T. A. Gopinatha Rao) கருத்து சூசி = ஊசி. கடக ஹஸ்தத்தில் மடங்கி அமைந்த விரல்களில் இருந்து சுட்டு விரல் மட்டும் ஊசி போல நீட்டிக் கொண்டிருப்பதால் இப்பெயர். சூசி ஹஸ்தம் ஒன்றை சுட்டிக் காட்ட பயன்படுகிறது. தர்ஜனி = சுட்டு விரல். தர்ஜனி ஹஸ்தம் எச்சரிக்க, அச்சுறுத்தப் பயன்படுகிறது. படிமங்கள் இரு ஹஸ்தங்களையும் துவாரபாலகர் படிமங்களில் பார்க்கலாம். சூசி ஹஸ்தத்தை கூத்தாடும் ஞானசம்பந்தர், சிவனின் காலசம்ஹார, கஜ சம்ஹார படிமங்களில் காணலாம். சில இடங்களில் மற்ற படிமங்களில் காணலாம் - எடுத்துக்காட்டு: கங்கை கொண்ட சோழபுரம் சரஸ்வதி தர்ஜனி ஹஸ்தம் தக்கோலம் ஜலநாதீசுவரர் கோயில் சூசி ஹஸ்தம் வேணுகோபால பார்த்தசாரதி கோயில், செங்கம் சூசி ஹஸ்தம் திருஞானசம்பந்தர், வெள்ளாலகரம், தஞ்சாவூர் சென்னை அருங்காட்சியகம் (நன்றி: Sailko...