அலபத்ம ஹஸ்தம் அமைதி எல்லா விரல்களும் ஒன்றைவிட்டு ஒன்று பிரிந்து, விரிந்த தாமரை மலர் போல தோற்றம் தரும். சிறு விரலில் இருந்து மற்ற விரல்கள் படிப்படியாக சரிந்ததாக அமையும். உள்ளங்கை மேல் நோக்கி இருக்கும். அலபத்ம ஹஸ்தம் கருத்து அலபத்மம் = அல + பத்மம் = விரிந்த தாமரை. அலபத்ம ஹஸ்தம் மகிழ்ச்சியை உணர்த்தும் கருத்துக் கை அமைதி. . படிமங்கள் துவாரபாலகர் - நடு உடலை அணுகியதாகவோ, மேற் கரத்திலோ அமையும். அலபத்ம ஹஸ்தம் துவாரபாலகர், தஞ்சாவூர் பெரிய கோயிலின் முருகர் கோயில் (நன்றி: Parvathisri, CC BY-SA 3.0 <https://creativecommons.org/licenses/by-sa/3.0>, via Wikimedia Commons) விஸ்மய ஹஸ்தம் அமைதி அலபத்மத்தில் உள்ளது போலவே எல்லா விரல்களும் ஒன்றைவிட்டு ஒன்று பிரிந்து, கை விரிந்த தாமரை மலர் போல தோற்றம் தரும். வேறுபாடு - கை செங்குத்தாக அமைந்து புறங்கை வெளிப்புறமாகவும் உள்ளங்கை உட்புறமாகவும் இருக்கும். விஸ்மய ஹஸ்தம் கருத்து விஸ்மய = வியப்பு விஸ்மய ஹஸ்தம் வியப்பை உணர்த்தும் கருத்துக் கை அமைதி. படிமங்கள் துவாரபாலகர் சிவனின் கஜசம்ஹார, காலசம்ஹர மூர்த்திகள் சிவனின் சில நாட்டிய வடிவங்கள்...