வியாக்கியான ஹஸ்தம், யோக ஹஸ்தம், அர்த்த பதாக ஹஸ்தம், திரிசூல ஹஸ்தம் ஆகிய நான்கு கை அமைதிகளும் யோகம், ஞானம், தத்துவம் சார்ந்தவை. வியாக்யான ஹஸ்தம் அமைதி வியாக்கியான ஹஸ்தம் அபய ஹஸ்தத்தைப் போன்றதே. அதே போன்று மார்பளவில் அமையும். வேறுபாடு என்னவெனில் கட்டை விரல் உள்ளங்கையில் இருந்து முன்னோக்கி நீண்டிருக்க சுட்டுவிரல் வளைந்து அதன் நுனி கட்டை விரலின் நுனியைத் தொட்டு வளையம் போன்று அமையும். வியாக்யான ஹஸ்தம் மாற்றுப் பெயர்கள் சின் முத்திரை - (छिन्मुद्रा) - சந்தம்ச (सन्दंश) முத்திரை - சந்தம்சம் = இடுக்கி; கட்டை விரலும் சுட்டு விரலும் சேர்ந்து இடுக்கி போல அமைந்ததிருப்பதால் வந்த பெயர். ஞான முத்திரை பௌத்த கலை மரபில் விதர்க்க (वितर्क) முத்திரை என்று அழைக்கப்படுகிறது. விதர்க்கம் = வி+தர்க்கம். கருத்து வியாக்யான ஹஸ்தம் ஒரு கருத்து ஒற்றைக் கை. வியாக்கியானம் = விளக்கம். ஞானாசிரியர் சீடர்களுக்கு தத்துவ விளக்கம் செய்வதைக் குறிக்கும். கட்டை விரல் - பரமாத்மா (பதி) சுட்டு விரல் - ஜீவாத்மா (பசு) நடு, அணி, சிறு விரல்கள் - ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்க...