Skip to main content

Posts

Showing posts with the label நித்ரா ஹஸ்தம்

கை அமைதிகள் - 2: அபய, வரத, தாடன, நித்ரா ஹஸ்தங்கள்

அபய ஹஸ்தம், வரத அஸ்தம், தாடன ஹஸ்தம், நித்ரா ஹஸ்தம் ஆகிய நான்கு ஹஸ்த வகைகளும் ஓரே கை அமைதியை அடிப்படையாகக் கொண்டவை. அந்த கை அமைதி பிடிக்கப்படும் விதத்தில்தான் வேறுபடுகின்றன. அபய ஹஸ்தம் (காக்கும் கை) - வரத ஹஸ்தம் (வழங்கும் கை) அமைதி இந்த இருவகை கை அமைதிகள்  ஐந்து விரல்களையும் நீட்டி, ஒன்றோடொன்று ஒட்டி அமைத்து, உள்ளங்கை வெளிநோக்கி இருக்குமாறு அமையும்.  அபய ஹஸ்தத்தில் விரல்கள் மேல்நோக்கி இருக்கும். நடுவிரலின் நுனி பொதுவாக முலைக்காம்பின் மட்டத்தில் அமையும். அபய ஹஸ்தத்தில் உள்ள கையை கீழ் நோக்கி திருப்பினால் கிடைக்கும் அமைதி வரத ஹஸ்தம். விரல்கள் கீழ்நோக்கி இருக்கும். நடுவிரலின் நுனி  ஆசன வாய் மட்டத்தில் அமையும்.  அபய ஹஸ்தம் (வலதுகை) வரத ஹஸ்தம் (இடது கை) குறிப்பு இவை கருத்து ஒற்றைக் கை அமைதிகள். அபயம் = அ+ பயம் = அச்சமின்மை. அபய ஹஸ்தம் என்னும் காக்கும் கை தன்னில் தஞ்சமடைந்தோர்க்கு 'அஞ்சற்க. யாமிருக்க பயமேன்' என்ற குறிப்பை உணர்த்துகிறது. அபய ஹஸ்த கை அமைதி நாட்டியத்தில் 'பதாகம்' (கொடி) என்று அழைக்கப்படுகிறது. வரதம் = வரமளிப்பது. 'அடியவர்கள் கேட்டதை வழங்குவேன்' என்னும் குற...

கை அமைதிகள் - 4: சூசி ஹஸ்தமும், தர்ஜனி ஹஸ்தமும்

அமைதி கடக ஹஸ்தத்தில் சுட்டு விரலை செங்குத்தாக நீட்டிய அமைதி சூசி ஹஸ்தம். சூசி ஹஸ்தத்தில் சுட்டு விரலையும் கையையும் சற்று பின்னால் சாய்த்த அமைதி தர்ஜனி ஹஸ்தம் . கீழ் நோக்கி சுட்டு விரலை நீட்டிய அமைதியும் சூசி ஹஸ்தமே. சூசி ஹஸ்தம் (From Elements of hindu iconography by T. A. Gopinatha Rao)   கருத்து   சூசி = ஊசி. கடக ஹஸ்தத்தில் மடங்கி அமைந்த விரல்களில் இருந்து  சுட்டு விரல் மட்டும் ஊசி போல நீட்டிக் கொண்டிருப்பதால் இப்பெயர். சூசி ஹஸ்தம் ஒன்றை சுட்டிக் காட்ட பயன்படுகிறது. தர்ஜனி = சுட்டு விரல். தர்ஜனி ஹஸ்தம் எச்சரிக்க, அச்சுறுத்தப் பயன்படுகிறது.  படிமங்கள் இரு ஹஸ்தங்களையும் துவாரபாலகர் படிமங்களில் பார்க்கலாம். சூசி ஹஸ்தத்தை கூத்தாடும் ஞானசம்பந்தர், சிவனின் காலசம்ஹார, கஜ சம்ஹார படிமங்களில் காணலாம். சில இடங்களில் மற்ற படிமங்களில் காணலாம் - எடுத்துக்காட்டு: கங்கை கொண்ட சோழபுரம் சரஸ்வதி தர்ஜனி ஹஸ்தம்  தக்கோலம் ஜலநாதீசுவரர் கோயில் சூசி ஹஸ்தம் வேணுகோபால பார்த்தசாரதி கோயில், செங்கம் சூசி ஹஸ்தம் திருஞானசம்பந்தர், வெள்ளாலகரம், தஞ்சாவூர் சென்னை அருங்காட்சியகம் (நன்றி: Sailko...