Skip to main content

கை அமைதிகள் - 12: தனுர் ஹஸ்தமும் சிகர ஹஸ்தமும்


அமைதி

இரண்டும் வில் ஏந்தும் கை அமைதிகள்.
  • தனுர் ஹஸ்தம் வில்லை பக்கத்தில் நிறுத்திப் பிடிக்கும் கை அமைதி.
  • கை உட்புறமாக திரும்பி இருக்கும்.
  • நடுவிரலும் மோதிர விரலும் வில்லை அணைத்திருக்கும்.
  • கட்டை விரல் நுனி மறுபக்கம் வில்லைத் தொட்டுக் கொண்டிருக்கும்.
  • இந்த ஹஸ்தம் பல மட்டங்களில் காணப்படுகிறது. எனினும், சுட்டு விரலின் நுனி படிமத்தின் புருவ மட்டத்தில் அமைவது எடுப்பான தோற்றம் தரும்.
தனுர் ஹஸ்தம்
  • சிகர ஹஸ்தம் அம்பை செலுத்தும்போது வில்லைத் தூக்கிப் பிடிக்கும் கை அமைதி.
  • கட்டை விரல் கையில் இருந்து செங்குத்தாக இருக்கும்.
  • மற்ற விரல்கள் கடக ஹஸ்தத்தில் உள்ளது போல உள்ளங்கை நோக்கி மடிந்திருக்கும்.
சிகர ஹஸ்தம்

படிமங்கள்
  • தனுர் ஹஸ்தம் - கோதண்டராமன், திரிபுராந்தகர், சிவன், மன்மதன்
  • சிகர ஹஸ்தம் - மகிஷாசுரமர்த்தினி, 
தனுர் ஹஸ்தம்

தனுர் ஹஸ்தம் - வில்லேந்தும் இடது முன் கை
முருகர், ஆவுடையார்கோயில்

கோதண்டராமர் - இடது கை
ராமசாமி கோயில், கும்பகோணம்

தனுர் ஹஸ்தம் - இடது முன் கை
திரிபுராந்தகர், வல்லம், தஞ்சாவூர் மாவட்டம்
சென்னை அருங்காட்சியகம்
(வில் தனியாக சேர்க்கப்படும்)
(நன்றி: Sailko, CC BY 3.0 <https://creativecommons.org/licenses/by/3.0>, via Wikimedia Commons)


தனுர் ஹஸ்தம் - இடது முன் கை
திரிபுராந்தகர், கொடும்பாளூர்
சென்னை அருங்காட்சியகம்

தனுர் ஹஸ்தம் - அமர்ந்த நிலையில் - இடது கை
ராமர், ராமசாமி கோயில், கும்பகோணம்

முஷ்டி ஹஸ்தம்

சிகர ஹஸ்தம்
மகிஷாசுரமர்த்தினி, மாமல்லபுரம்
(நன்றி: Richard Mortel from Riyadh, Saudi Arabia, CC BY 2.0 <https://creativecommons.org/licenses/by/2.0>, via Wikimedia Commons)



நன்றிக்கடன்
  • கணபதி ஸ்தபதி; சிற்பச் செந்நூல்; தொழில் நுட்பக் கல்விக் கழகம்; மூன்றாம் வெளியீடு; 2001
  • மா மாரிராஜன்; சிற்ப இலக்கணத் தொடர்; மெய் எழுத்து 








Comments

Popular posts from this blog

கை அமைதிகள் 1: அறிமுகம்

கணபதி ஸ்தபதியாரின் 'சிற்பச் செந்நூல்' சிற்பக் கலையின் அடிப்படை இலக்கணங்களை விளக்கும் இக்காலத்தின் முதன்மை நூலாகத் திகழ்கிறது. அதன் அடிப்படையில் ' ஹஸ்தங்கள்'  என்னும் கை அமைதிகளைபடங்களுடன் விளக்கும் முயற்சி இது.  கை விரல்களை 'நீட்டுதல், மடக்குதல், கூட்டுதல், விலக்குதல், குவித்தல்' ஆகிய ஐந்து நிலைகளின் அடிப்படையில், கை அமைதிகளை ஒரு பொருளை அல்லது கருத்தைச் சுட்டும் குறியீடுகளாக ஆடற் கலையில் வரையறுத்துள்ளனர். ஆடற் கலையின் இந்தக் கை அமைதிகள் 'முத்திரைகள் அல்லது பிடிகள்' எனப்படும். சிற்பக்கலையில் இந்தக் கை அமைதிகள் சில மாற்றங்களோடும், பெயர் வேறுபாடுகளோடும் வழங்கி வருகின்றன. சிற்பக் கலையில் கை அமைதி 'ஹஸ்தம்' எனப்படுகிறது.  வகைப்பாடு கை அமைதிகளின் வகைப்பாடு கை அமைதிகள் இரு வகைப்படும் தொழிற் கைகள் - ஆயுதங்கள் முதலிய கருவிகளை ஏந்தியோ அல்லது கருவிகள் ஏதும் இன்றி ஒரு கருத்தை சுட்டியோ அமையும் கைகள். எழிற் கைகள் - எந்த கருவியும் இல்லாமல், எந்த கருத்தையும் குறிக்காமல் சிற்பத்தின் சமநிலைக்காகவும் எழிலுக்காகவும் அமையும் கைகள். தொழிற் கைகள் இருவகைப்படும்...

சிற்ப வகைகள்

சிற்ப வகைகள் சிற்பங்களை அவற்றின் உருவ அமைப்பு அடிப்படையில் முழு உருவச் சிற்பங்கள், புடைப்புச் சிற்பங்கள் என இரண்டாகப் பிரிக்கலாம். முழு உருவச் சிற்பம் (சித்திரம்)  - எல்லா உறுப்புகளும் முழுமையாகவும், உரிய  அளவு அமைப்புடனும் அமைந்து உருவத்தின் முன்பகுதியும் பின்பகுதியும் தெளிவாகத் தெரியும் வகையில் அமைந்த சிற்பங்கள் இவை.  கீழ் பக்கத்தை தவிர மற்ற பக்கங்கள் எதையும் சாராமல் தனித்து நிற்கும் தன்மை உடையவை. உலோகப்படிமங்கள் சிறந்த எடுத்துக்காட்டு.  'பூர்ண சித்திரம்'  என்றும் பெயருண்டு. அர்த்தநாரி சென்னை அருங்காட்சியகம் நன்றி: Sailko, CC BY 3.0 <https://creativecommons.org/licenses/by/3.0>, via Wikimedia Commons) புடைப்புச் சிற்பம் (சித்ரார்த்தம்)  -  முற்பகுதி உறுப்புகள் மட்டும் அமைக்கப்பட்டு பின் பகுதி உறுப்புகள் இல்லாத சிற்பம். சுவர், விதானம், பாறை, தரை ஆகியவற்றில் இருந்து வெளியே புடைத்துக் கொண்டிருக்கும். ( சுவர், திரைச்சீலை, பலகை, காகிதம் முதலியவற்றின் மீது புடைப்பின்றி வரையப்படும் ஓவியம்  ' சித்ராபாசம்'  எனப்படும்   . படம் என்றும்...

கை அமைதிகள் - 14: இரட்டைக் கை அமைதிகள் நான்கு: அஞ்சலி, தியான, புஷ்பபுட, தர்ம சக்கர ஹஸ்தங்கள்

அஞ்சலி ஹஸ்தம் அமைதி இரண்டு கைகளிலும் ஐந்து விரல்களையும் நீட்டி  இரு கைகளையும் மார்புக்கு நேராக ஒன்றாக சேர்த்து வைத்து வணங்கும் கை அமைதி. கைகளுக்கு இடையே அக்க மாலை, பூ, பூ மாலை போன்றவை இருப்பதுண்டு. அஞ்சலி ஹஸ்தம் மாற்றுப் பெயர்கள் நமஸ்கார முத்திரை,  குறிப்பு அஞ்சலி ஹஸ்தம் வணங்குதலைக் குறிக்கும். படிமங்கள் புராண, வரலாற்று அடியவர்கள் அஞ்சலி ஹஸ்தம் அனுமன், ராமசாமி கோயில், கும்பகோணம் அஞ்சலி ஹஸ்தம் இலக்குவன், ராமசாமி கோயில், கும்பகோணம் அஞ்சலி ஹஸ்தம் ரகுநாத நாயக்கர், ராமசாமி கோயில், கும்பகோணம் அஞ்சலி ஹஸ்தம் அதிகார நந்தி, உருத்திராட்ச மண்டபம் அண்ணாமலையார் கோயில், திருவண்ணாமலை புடைப்பு குறைந்த தாழ், இடை புடைப்புச் சிற்பங்களில் அஞ்சலி ஹஸ்தம் இவ்வாறு விரிந்து அமையலாம். தியான ஹஸ்தம் அமைதி அமர்ந்த கோலத்தில் இடது கையை உள்ளங்கை மேல் நோக்கும்படி மடியில் வைத்து வலது கையையும் அவ்வாறே இடது கை மீது படிய வைத்திருக்கும் கை அமைதி. இரு கைகளிலும் விரல்கள் ஒன்றோடொன்று சேர்ந்து நீண்டிருக்கும். இடது கை விரல்கள் வலது பக்கம் நோக்கியும், வல்து கை விரல்கள் இடது பக்கம் நோக்கியும் நீண்டிருக்கும் தியான ஹஸ்தம் க...