Skip to main content

கை அமைதிகள் - 8: பல்லவ ஹஸ்தமும், பூ ஸ்பரிச ஹஸ்தமும்

பூ ஸ்பரிச ஹஸ்தமும், எழிற்கைகள் நான்கும் (கஜ, தண்ட, டோல, பிரசாரித ஹஸ்தங்கள்) பல்லவ ஹஸ்தத்தை அடிப்படையாகக் கொண்டவை.

பல்லவ ஹஸ்தம்
  • விரல்களை நீட்டி புறங்கை வெளிப்புறமாகவும் உள்ளங்கை உட்புறமாகவும் இருக்க, 
  • மணிக்கட்டிலிருந்து இலை போல கீழ் நோக்கி மடிந்து தொங்கும் கை அமைதி.
  • வலது அல்லது இடது முன்கையில் அமையும்
பல்லவ ஹஸ்தம்

குறிப்பு
  • பல்லவ ஹஸ்தம் ஒரு கருத்து ஒற்றைத் தொழிற் கை.
  • பல்லவம் (पल्लव) = தளிர். மென்மையான தளிர் தொங்குவது போன்ற தோற்றத்தால் இப்பெயர். 
  • தமிழில் 'தளிர்க்கை' .
படிமங்கள்
  • ரிஷபாந்திகர் (வலது கை)
  • ரிஷபாந்திக அர்த்தநாரி (வலது கை)
  • ராஜகோபாலன் (இடது கை)
  • துவாரபாலகர்
பல்லவ ஹஸ்தம்
ரிஷபாந்திகர், ஆவுடையார் கோயில்

பல்லவ ஹஸ்தம்
ரிஷபாந்திக அர்த்தநாரி
கொடும்பாளூர் மூவர் கோயில்
சென்னை அருங்காட்சியகம்

செப்புப் படிமத்தில்

பல்லவ ஹஸ்தம்
ரிஷபாந்திக அர்த்தநாரி (ரிஷபம் தனியாக இருக்கும்)
சென்னை அருங்காட்சியகம்

பல்லவ ஹஸ்தம் - இடது கை
ராஜமன்னார் எனும் ராஜகோபாலர், மன்னார்குடி
(நன்றி:தினமலர் temple.dinamalar.com)

பல்லவ ஹஸ்தம் -  வலது கை கதையின் மீது
துவாரபாலகர், உட்டாணி, கும்பகோணம்
சென்னை அருங்காட்சியகம்

பூ ஸ்பரிச ஹஸ்தம்

அமைதி
  • பூ ஸ்பரிச ஹஸ்தம் பல்லவ முத்திரை உடைய கை பூமியை தொட்டவாறு அமைந்த அமைதி.
பூ ஸ்பரிச ஹஸ்தம்

குறிப்பு

பூ ஸ்பரிச ஹஸ்தம் புத்தர் போதி என்னும் அரச மரத்தின் கீழ் ஞானம் அடைந்த தருணத்தைக் குறிக்கிறது. அப்போது புத்தர் தனது வலது கையால் பூமியைத் தொட்டு தான் ஞானம் பெற்றதற்கு சாட்சியாக பூதேவியை அழைத்தார்,

படிமம்

பூ ஸ்பரிச ஹஸ்தம் புத்தர் படிமங்களுக்கே உரியது.

பூ ஸ்பரிச ஹஸ்தம்
நாளந்தா, பட்னா அருங்காட்சியகம்
(நன்றி: Photo Dharma from Penang, Malaysia, CC BY 2.0 <https://creativecommons.org/licenses/by/2.0>, via Wikimedia Commons)

பூ ஸ்பரிச ஹஸ்தம்
புத்த கயா
(நன்றி: Sumita Roy Dutta, CC BY-SA 4.0 <https://creativecommons.org/licenses/by-sa/4.0>, via Wikimedia Commons)



பூ ஸ்பரிச ஹஸ்தம்
சயனவரம், அரக்கோணம் அருகில்

நன்றிக்கடன்
  • கணபதி ஸ்தபதி; சிற்பச் செந்நூல்; தொழில் நுட்பக் கல்விக் கழகம்; மூன்றாம் வெளியீடு; 2001



Comments

Popular posts from this blog

கை அமைதிகள் 1: அறிமுகம்

கணபதி ஸ்தபதியாரின் 'சிற்பச் செந்நூல்' சிற்பக் கலையின் அடிப்படை இலக்கணங்களை விளக்கும் இக்காலத்தின் முதன்மை நூலாகத் திகழ்கிறது. அதன் அடிப்படையில் ' ஹஸ்தங்கள்'  என்னும் கை அமைதிகளைபடங்களுடன் விளக்கும் முயற்சி இது.  கை விரல்களை 'நீட்டுதல், மடக்குதல், கூட்டுதல், விலக்குதல், குவித்தல்' ஆகிய ஐந்து நிலைகளின் அடிப்படையில், கை அமைதிகளை ஒரு பொருளை அல்லது கருத்தைச் சுட்டும் குறியீடுகளாக ஆடற் கலையில் வரையறுத்துள்ளனர். ஆடற் கலையின் இந்தக் கை அமைதிகள் 'முத்திரைகள் அல்லது பிடிகள்' எனப்படும். சிற்பக்கலையில் இந்தக் கை அமைதிகள் சில மாற்றங்களோடும், பெயர் வேறுபாடுகளோடும் வழங்கி வருகின்றன. சிற்பக் கலையில் கை அமைதி 'ஹஸ்தம்' எனப்படுகிறது.  வகைப்பாடு கை அமைதிகளின் வகைப்பாடு கை அமைதிகள் இரு வகைப்படும் தொழிற் கைகள் - ஆயுதங்கள் முதலிய கருவிகளை ஏந்தியோ அல்லது கருவிகள் ஏதும் இன்றி ஒரு கருத்தை சுட்டியோ அமையும் கைகள். எழிற் கைகள் - எந்த கருவியும் இல்லாமல், எந்த கருத்தையும் குறிக்காமல் சிற்பத்தின் சமநிலைக்காகவும் எழிலுக்காகவும் அமையும் கைகள். தொழிற் கைகள் இருவகைப்படும்...

திருக்கோலங்கள் (ஆசனங்கள்)

ஆடற்கலை, யோகம், மக்களின் வாழ்வில் காணப்படும் இயல்பான அமைதிகள் இவற்றில் உள்ள கூறுகளைத் தொகுத்து தன் தேவைக்கேற்ப இலக்கணம் வகுத்து வகைமைப் படுத்திக் கொண்டது சிற்பக்கலை. தெரிந்ததன் மூலம் தெரியாததை விளக்கும் முயற்சி. கணபதி ஸ்தபதியாரின் 'சிற்பச் செந்நூல்' சிற்பக் கலையின் அடிப்படை இலக்கணங்களை விளக்கும் இக்காலத்தின் முதன்மை நூலாகத் திகழ்கிறது. அதன் அடிப்படையில் திருக்கோலம் என்னும் ஆசனங்களை படங்களுடன் விளக்கும் முயற்சி இது. அவர் குறிப்பிட்டிற்கும் வகைமைகளுக்குள் துணை வகைமைகளை உருவாக்கி திருக்கோலங்கள் வரிசைப் படுத்தப்படுள்ளன. திருக்கோலம் என்பது படிமங்களின் உடல் அமைதியைக் குறிக்கும். குறிப்பாக கால் அமைதிகளைக் குறிக்கும், 'ஹஸ்தம்' கை அமைதியைக் குறிப்பது போல.  வடமொழியில் திருக்கோலம் ' ஆசனம்' எனப்படும்.  'ஆசனம்' என்னும் சொல் பொதுவாக அமர்ந்த கோலத்தைக் குறிக்கும். அதே சமயம் சிற்பக்கலைச் சொல்லாக 'கோலம்' (தோன்றும் நிலை) என்றும் பொருள் தரும். 'ஆசனம்' இருக்கை, பீடம் என்றும் பொருள் தரும். எனவே 'ஆசனம்' என்ற சொல்லுக்கு சிற்பக் கலையில் மூன்று பொருள்கள் உ...

சிற்ப வகைகள்

சிற்ப வகைகள் சிற்பங்களை அவற்றின் உருவ அமைப்பு அடிப்படையில் முழு உருவச் சிற்பங்கள், புடைப்புச் சிற்பங்கள் என இரண்டாகப் பிரிக்கலாம். முழு உருவச் சிற்பம் (சித்திரம்)  - எல்லா உறுப்புகளும் முழுமையாகவும், உரிய  அளவு அமைப்புடனும் அமைந்து உருவத்தின் முன்பகுதியும் பின்பகுதியும் தெளிவாகத் தெரியும் வகையில் அமைந்த சிற்பங்கள் இவை.  கீழ் பக்கத்தை தவிர மற்ற பக்கங்கள் எதையும் சாராமல் தனித்து நிற்கும் தன்மை உடையவை. உலோகப்படிமங்கள் சிறந்த எடுத்துக்காட்டு.  'பூர்ண சித்திரம்'  என்றும் பெயருண்டு. அர்த்தநாரி சென்னை அருங்காட்சியகம் நன்றி: Sailko, CC BY 3.0 <https://creativecommons.org/licenses/by/3.0>, via Wikimedia Commons) புடைப்புச் சிற்பம் (சித்ரார்த்தம்)  -  முற்பகுதி உறுப்புகள் மட்டும் அமைக்கப்பட்டு பின் பகுதி உறுப்புகள் இல்லாத சிற்பம். சுவர், விதானம், பாறை, தரை ஆகியவற்றில் இருந்து வெளியே புடைத்துக் கொண்டிருக்கும். ( சுவர், திரைச்சீலை, பலகை, காகிதம் முதலியவற்றின் மீது புடைப்பின்றி வரையப்படும் ஓவியம்  ' சித்ராபாசம்'  எனப்படும்   . படம் என்றும்...