Skip to main content

Posts

கை அமைதிகள் - 10: கடக ஹஸ்தமும் சிம்மகர்ண ஹஸ்தமும்

  கடக ஹஸ்தம் அமைதி கட்டை விரல் நீட்டப்பட்டு சற்று உள்புறமாக வளைந்திருக்கும். நடுவிரலும் அணிவிரலும் ஒன்றோடொன்று இணைந்து அவற்றின் மூன்று கணுக்களும் கீழ் முட்டில் முன்னோக்கி வளைந்திருக்கும். சுட்டுவிரலும், சுண்டு விரலும் அவற்றின் மேல் இரு கணுக்கள் மட்டும் இரண்டாம் முட்டில் சற்று கீழ் நோக்கி வளைந்திருக்கும். நடுவிரல் நுனி அணிவிரல் நுனியை விட சற்று முன்னோக்கி இருக்கும். கடக முத்திரை குறிப்பு கடகம் = நண்டு.  இது ஒரு கருவி ஒற்றை தொழிற்கை.  கடக ஹஸ்தம் மலர், பாசம், அங்குசம், தண்டம், கத்தி, அம்பு முதலிய பல்வகை ஆயுதங்களை பிடிக்க பயன்படுகிறது. ஏழு கருவி ஒற்றைத் தொழிற்கைகளுள் கடக ஹஸ்தம், கர்த்தரி முக ஹஸ்தம், முஷ்டி ஹஸ்தம் மூன்றும் இவ்வாறு பல்வகை ஆயுதங்களை ஏந்துபவை. சிகர ஹஸ்தம், தனுர் ஹஸ்தம் இரண்டும் வில் மட்டுமே ஏந்துபவை. டமரு ஹஸ்தம் டமருவையும், அர்த்த சந்திர ஹஸ்தம் தீயையும் நடராஜர் படிமங்களில் ஏந்துபவை.  கடக ஹஸ்தம் - பிள்ளையார் வலது மேல் கை கடக ஹஸ்தத்தில் அங்குசம் இடது மேல் கை கடக ஹஸ்தத்தில் பாசம் வலது முன் கடக ஹஸ்தத்தில் தந்தம் ருத்திராட்ச மண்டபம், அண்ணாமலையார் கோயில், திருவண்ண...

கை மைதிகள் - 9: எழிற்கைகள் நான்கு: கஜ, தண்ட, டோல, பிரசாரித ஹஸ்தங்கள்

எழிற்கைகள் எழிற்கைகள் கருவி ஏந்தாமல், பொதுவான கருத்து ஏதும் இல்லாமல் படிமத்தின் எழிலுக்காக அமையும் கை அமைதிகள். கஜ ஹஸ்தம், தண்ட ஹஸ்தம், டோல ஹஸ்தம், பிரசாரித ஹஸ்தம் ஆகிய நான்கு எழிற்கைகளும் மணிக்கட்டிலிருந்து பல்லவ ஹஸ்தத்தின் கை அமைதியை கொண்டவையே. மேலும் நான்கும் முழங்கை வளையாமல் கையை நேராக வைத்தவை. அவ்வாறு நீண்ட கைகள் தோளில் இருந்து எந்தப் பக்கம் நீண்டுள்ளன என்பதில்தான் வேறுபாடு. தவிர அவை அமையும் படிம வகைகளும் வேறு. கஜ ஹஸ்தம் - உடலின் குறுக்கே எதிர் பக்கம் நீண்டது-  நாட்டிய  நிலை படிமங்களுக்கு உரியது. தண்ட ஹஸ்தம் - முன்னோக்கி நீண்டது -  அமர்ந்த நிலை  படிமங்களுக்கு உரியது. டோல ஹஸ்தம் - உடலின் பக்கத்தில் தொங்கி நின்றது -  நின்ற நிலை பெண்  படிமங்களுக்கு உரியது.  பிரசாரித ஹஸ்தம் - பக்கவாட்டில் வெளிப் பக்கமாக நீண்டது-  நாட்டிய நிலை  படிமங்களுக்கு உரியது. கஜ ஹஸ்தம் - தண்ட ஹஸ்தம் - டோல ஹஸ்தம் - பிரசாரித ஹஸ்தம் கஜ ஹஸ்தம்  அமைதி முழங்கையை மடிக்காமல், நேராக வைத்த கை உடலின் குறுக்கே எதிர்பக்கம் நோக்கி நீண்டு அமையும். மணிக்கட்டிலிருந்து பல்லவ ஹஸ்தமா...

கை அமைதிகள் - 8: பல்லவ ஹஸ்தமும், பூ ஸ்பரிச ஹஸ்தமும்

பூ ஸ்பரிச ஹஸ்தமும், எழிற்கைகள் நான்கும் (கஜ, தண்ட, டோல, பிரசாரித ஹஸ்தங்கள்) பல்லவ ஹஸ்தத்தை அடிப்படையாகக் கொண்டவை. பல்லவ ஹஸ்தம் விரல்களை நீட்டி புறங்கை வெளிப்புறமாகவும் உள்ளங்கை உட்புறமாகவும் இருக்க,  மணிக்கட்டிலிருந்து இலை போல கீழ் நோக்கி மடிந்து தொங்கும் கை அமைதி. வலது அல்லது இடது முன்கையில் அமையும் பல்லவ ஹஸ்தம் குறிப்பு பல்லவ ஹஸ்தம் ஒரு கருத்து ஒற்றைத் தொழிற் கை. பல்லவம் (पल्लव) = தளிர். மென்மையான தளிர் தொங்குவது போன்ற தோற்றத்தால் இப்பெயர்.  தமிழில்  'தளிர்க்கை' . படிமங்கள் ரிஷபாந்திகர் (வலது கை) ரிஷபாந்திக அர்த்தநாரி (வலது கை) ராஜகோபாலன் (இடது கை) துவாரபாலகர் பல்லவ ஹஸ்தம் ரிஷபாந்திகர், ஆவுடையார் கோயில் பல்லவ ஹஸ்தம் ரிஷபாந்திக அர்த்தநாரி கொடும்பாளூர் மூவர் கோயில் சென்னை அருங்காட்சியகம் செப்புப் படிமத்தில் பல்லவ ஹஸ்தம் ரிஷபாந்திக அர்த்தநாரி (ரிஷபம் தனியாக இருக்கும்) சென்னை அருங்காட்சியகம் பல்லவ ஹஸ்தம் - இடது கை ராஜமன்னார் எனும் ராஜகோபாலர், மன்னார்குடி (நன்றி:தினமலர் temple.dinamalar.com) பல்லவ ஹஸ்தம் -  வலது கை கதையின் மீது துவாரபாலகர், உட்டாணி, கும்பகோணம் சென்னை அ...

கை அமைதிகள் - 7: ஆலிங்கன ஹஸ்தம்

அமைதி ஆலிங்கன ஹஸ்தம் இறைவன் இறைவியின் தோளையோ இடுப்பையோ அணைக்கும் கை அமைதி.  கட்டை விரல் மற்ற விரல்களில் இருந்து சற்று பிரிந்திருக்கும்.  மற்ற நான்கு விரல்கள் ஒட்டியிருக்கும். அவற்றில் சுட்டு விரலும் சிறு விரலும் உடலை விட்டு சிறிது விலகி இருக்கும். ஆலிங்கன ஹஸ்தம் குறிப்பு ஆலிங்கனம் = அணைத்தல். ஆலிங்கன ஹஸ்தம் ஒரு கருத்து ஒற்றைக் கை. கரம் ஆலிங்கன ஹஸ்தம் முன் இடது கை அமைதி - தேவியர் இடது புறம் இருப்பதால். படிமங்கள் கங்காதரர் ஆலிங்கன சந்திரசேகரர் லக்ஷ்மிநாராயணர் ஆலிங்கன ஹஸ்தம் - இடுப்பை அணைத்த இடது கை கங்காதரர், கங்கைகொண்ட சோழபுரம் (நன்றி: https://www.google.com/profiles/trshash84, CC BY-SA 3.0 <https://creativecommons.org/licenses/by-sa/3.0>, via Wikimedia Commons) ஆலிங்கன ஹஸ்தம் - இடையை அணைக்கும் இடது கை லக்ஷ்மி நாராயணர் பெங்களூரு அரசு அருங்காட்சியகம் ஆலிங்கன ஹஸ்தம் - முலையை அணைக்கும் இடது கை ஆலிங்கன சந்திரசேகர மூர்த்தி பெங்களூரு அரசு அருங்காட்சியகம் ஆலிங்கன ஹஸ்தம் - தோளை அணைத்த இடது கை  கண்ணனும் ராதையும் ராமசாமி கோயில், கும்பகோணம் ஆலிங்கன ஹஸ்தம் ஆலிங்கன சந்திரசேகரர்...

கை அமைதிகள் - 6: கடி ஹஸ்தமும், ஊரு ஹஸ்தமும்

அமைதி உடல் பக்கத்தில் தொங்கும் கை, இடுப்பில் படிந்திருக்கும் அமைதி கடி ஹஸ்தம் . கடி (कटि) = இடுப்பு உடல் பக்கத்தில் தொங்கும் கை, தொடையில் படிந்திருக்கும் அமைதி ஊரு ஹஸ்தம்.  ஊரு = தொடை கட்டை விரல் மற்ற விரல்களில் இருந்து விலகி பிகுவாக இடுப்பில் / தொடையில் ஊன்றியிருக்கும், மற்ற விரல்களும் உள்ளங்கையையும் இடுப்பில் / தொடையில் படிந்திருக்கும். நடு விரலும் மோதிர விரலும் உடலில் நன்கு படிந்திருக்கும். சுட்டு விரலும் சிறு விரலும் உடலில் இருந்து சற்று விலகி இருக்கும். கடி ஹஸ்தத்தில் முழங்கை சற்று வளைந்திருக்கும். ஊரு ஹஸ்தத்தில் முழங்கை நீண்டிருக்கும். கடி ஹஸ்தத்தில் கட்டை விரல் தவிர்த்த மற்ற விரல்கள் சற்று மேல் நோக்கி இருக்கும். ஊரு ஹஸ்தத்தில் கட்டை விரல் தவிர்த்த மற்ற விரல்கள் தரைக்கு சம மட்டத்தில் இருக்கும். கடி ஹஸ்தம்  -  ஊரு ஹஸ்தம் மாற்றுப் பெயர்கள் ஊரு ஹஸ்தம் - கடியவலம்பிதம் (कट्यवलम्बितहस्त) என்றும் அழைக்கப்படும். இடுப்புக்கு கீழ் தொங்கி அமையும் கை அமைதி ஆதலால் இப்பெயர், கடி ஹஸ்தம், கடிக ஹஸ்தம் என்றும் அழைக்கப்படும். குறிப்பு இந்த ஹஸ்தங்கள் இலகுவான நிலையையும் தன்னம்...

கை அமைதிகள் - 3: வியாக்கியான, யோக, அர்த்த பதாக, திரிசூல ஹஸ்தங்கள்

வியாக்கியான ஹஸ்தம், யோக ஹஸ்தம், அர்த்த பதாக ஹஸ்தம், திரிசூல ஹஸ்தம் ஆகிய நான்கு கை அமைதிகளும் யோகம், ஞானம், தத்துவம் சார்ந்தவை. வியாக்யான ஹஸ்தம் அமைதி வியாக்கியான ஹஸ்தம் அபய ஹஸ்தத்தைப் போன்றதே. அதே போன்று மார்பளவில் அமையும். வேறுபாடு என்னவெனில்  கட்டை விரல் உள்ளங்கையில் இருந்து முன்னோக்கி நீண்டிருக்க சுட்டுவிரல் வளைந்து அதன் நுனி கட்டை விரலின் நுனியைத் தொட்டு  வளையம் போன்று அமையும். வியாக்யான ஹஸ்தம் மாற்றுப் பெயர்கள் சின் முத்திரை - (छिन्मुद्रा) -  சந்தம்ச (सन्दंश) முத்திரை - சந்தம்சம் = இடுக்கி; கட்டை விரலும் சுட்டு விரலும் சேர்ந்து இடுக்கி போல அமைந்ததிருப்பதால் வந்த பெயர்.  ஞான முத்திரை  பௌத்த கலை மரபில் விதர்க்க (वितर्क) முத்திரை என்று அழைக்கப்படுகிறது.  விதர்க்கம் = வி+தர்க்கம்.  கருத்து வியாக்யான ஹஸ்தம் ஒரு கருத்து ஒற்றைக் கை. வியாக்கியானம் = விளக்கம்.  ஞானாசிரியர் சீடர்களுக்கு தத்துவ விளக்கம் செய்வதைக் குறிக்கும்.  கட்டை விரல் - பரமாத்மா (பதி) சுட்டு விரல் - ஜீவாத்மா (பசு) நடு, அணி, சிறு விரல்கள் - ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்க...